Tuesday, July 8, 2008
பேய் குங் பாங்
பேய் குங் பாங் என்னும் அருங்காட்சியகம்.பெய்ஜிங்கில் பேய் குங் பாங் என்ற சிறப்பான அருங்காட்சியகம் ஒன்று உள்ளது.அரண்மனை பூத்தையல் ஜேடு அரக்குப் பொருட்கள் காகித கத்தரிப்பு உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேலான சீனப் பாரம்பரிய கலைப்பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.இவ்வருங்காட்சியகம் பெய்ஜிங் மாநகரத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது.சுமார் 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான மண்டபத்தில் 30க்கு அதிகமான பணி அறைகள் உள்ளன.இவற்றில் பாரம்பரிய அரண்மனை மற்றும் நாட்டுப்புறக் கலைப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.சர்வதேச சுற்றுலா சம்மேளனத்தின் தலைவர் எரிக் துலுக் பேய் குங் பாங் என்னும் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பிறகு புகழ்மிக்க பிரான்ஸ் Louvre அருங்காட்சியகத்தை போல சீனாவின் Louvre அருங்காட்சியகம் என பாராட்டினார்.இவ்வருங்காட்சியகத்தின் பணியாளர் TAO YE கூறியதாவது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment