Monday, July 7, 2008

சக்ராதா

சக்ராதாபிரிட்டீஷ் ராணுவத்தில் பணிபுரிந்த கர்னல் ஹ்யூம் என்பவர் பிரிட்டீஷ் துருப்புகளுக்கு இதுவே ஏற்ற இடம் என்று கண்டறிந்து கூறியதால் 1866ம் ஆண்டு இங்கு கன்டோன்மெண்ட் படைவீடு அமைக்கப்பட்டது.காண வேண்டிய இடங்கள் தேவபாண் கடல் மட்டத்திலிருந்து 2865 மீட்டர் 9400 அடி உயரத்தில் சக்ராதாவிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள தேவபாண் அழகிய சூழ்நிலைகளுக்கும் காட்சிக்கும் புகழ்பெற்றது.பயணிகள் தங்குவதற்கு காட்டிலாகா ஒய்வு இல்லம் ஒன்று உள்ளது.டைகர் நீர்வீழ்ச்சி சக்ராதாவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அழகிய சூழலில் அமைந்த இந்த மலை அருவி இந்த மாநிலத்திலேயே மிக உயர்ந்தது.லக்மண்டல் சக்ராதாவிலிருந்து 57 கி.மீ. தொலைவில் உள்ளது.சக்ராதாவிலிருந்து இங்கு செல்ல சாலை உள்ளது.கால்ஸி சக்ராதாவிலிருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது.இங்குள்ள அசோகர் சாஸனம் தொல்பொருள் இயல் துறையினரால் பராமா஢க்கப்படுகிறது.தவிர இங்கு ஒரு பால் பண்ணையும் கோழிப்பண்ணையும் உள்ளன.டாக் பத்தர்.நதிக்கரையும் பூந்தோட்டங்களும் பச்சைக் கம்பளம் விண஢க்கும் புல்வௌதயும் பின்னணியில் கம்பீரமாக நிற்கும் மலைகளும் இந்த இடத்தை சௌந்தர்யமிக்கதாக ஆக்கியுள்ளன.கால்சியிலிருந்து டேராடூனுக்கு வரும் வழியில் 7 கி.மீ தொலைவில் உள்ளது.எல்லா வசதிகளும் கொண்ட சுற்றுலாப் பயணிகள் விடுதி இங்குள்ளது.

No comments: