Monday, July 7, 2008
சென்னை
சென்னை Chennai தமிழ்நாட்டின் தலைநகரும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரும் ஆகும்.சென்னை வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று.17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல் சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது.சென்னை தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது.சென்னை நகரில் உள்ள மரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று.சென்னை கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம்.பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ சோழ மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது.சென்னையில் உள்ள மயிலாப்பூர் பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது.டிசம்பர் 2004 சுனாமி தாக்கிய இடங்களில் சென்னையும் ஒன்றாகும்.இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அருகில் உள்ளது.சென்னை நகரின் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது.சென்னை நகரத்தின் பரப்பளவு 174 கி.மீல.சென்னை மாவட்டமும் திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப் பகுதிகளாக கருதப்படுகின்றன.சென்னை நகரின் அருகாமையில் மாமல்லபுரம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அரக்கோணம் ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய ஊர்கள் உள்ளன.சென்னையில் வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது.சென்னையில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை 44.1றூ செல்சியஸ் குறைந்த வெப்பநிலை 15.8றூ செல்சியஸ்.சென்னையில் வருடத்திற்கு சுமார் 1300 மி.மீ மழை பெய்கிறது.கூவம் மற்றும் அடையாறு ஆகிய நதிகள் சென்னை நகரின் வழியாக பாய்கின்றன.சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆகும்.சென்னை மெரீனா கடற்கரை செயற்கைக் கோள் புகைப்படம்சென்னை நகரின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன.மத்திய சென்னை சென்னையின் முக்கியப் பகுதியாகும்.தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.[தொகு] நிர்வாகம்.[தொகு] நிர்வாகம்.சென்னை மாநகரின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது.சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் கட்டடத்தில் உள்ளது.தமிழக சட்டசபை சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளது.சென்னையில் 18 தமிழக சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.வட சென்னையில் ராயபுரம் துறைமுகம் ராதாகிருஷ்ணன் நகர் பெரம்பூர் திருவொற்றியூர் வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளும் மத்திய சென்னையில் பூங்கா நகர் புரசைவாக்கம் எழும்பூர் அண்ணா நகர் ஆயிரம் விளக்கு சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளும் தென் சென்னையில் தி. நகர் திருவல்லிக்கேணி மயிலாப்பூர் சைதாப்பேட்டை ஆலந்தூர் தாம்பரம் ஆகிய தொகுதிகளும் உள்ளன.இந்திய பாராளுமன்றத்தின் மூன்று தொகுதிகள் சென்னையில் உள்ளன.அவை வட சென்னை மத்திய சென்னை தென் சென்னை ஆகியவை.தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது.தமிழக காவல் துறையின் பிரிவான சென்னை மாநகர காவல்துறை சென்னையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறது.சென்னை மாநகர் முப்பத்தாறு காவல் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.121 காவல் நிலையங்கள் சென்னை மாநகரப் பகுதியில் உள்ளன.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை விளங்கி வருகிறது.பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன.தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால் பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.1990களிலிருந்து சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன.இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது.டி.வி.எஸ் TVS அசோக் லெய்லாண்ட் ஹையுண்டாய் Hyundai போர்டு Ford மிட்சுபிஷி Mitsubishi டி.ஐ எம்.ஆர்.எஃப் பி.எம்.டபிள்யூ BMW போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன.சென்னையை அடுத்த ஆவடியில் இந்திய ராணுவம் தொடர்பான பல நிறுவனங்களின் கிளைகள் உள்ளன.சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும்.சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மையாக காணப்படுகின்றனர்.சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் விளங்குகிறது.சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது.தமிழ் திரைப்படப் பாடல்கள் சென்னை மக்களால் மிகவும் ரசிக்கப் படுகிறது.இட்லி வடை தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும் சமீபத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன.சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில்.புனித ஜார்ஜ் கோட்டை ரிப்பன் கட்டிடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம்.சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு மற்றும் தென்கிழக்காசியா வளைகுடா நாடுகள் ஐரோப்பா வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கும் நல்ல விமானப் போக்குவரத்து உண்டு.சென்னை விமான நிலையம் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.சென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று.மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ஆகியவை சென்னையின் இரு முக்கிய ரயில் நிலையங்கள்.சென்னை சென்ட்ரல் சென்னையின் வடக்கு மற்றும் மேற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது.சென்னை எழும்பூர் மற்ற தமிழக நகரங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது.சென்னை புறநகர் ரயில்வே மூன்று மார்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.அவை சென்னை சென்ட்ரல் திருவள்ளூர் சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி சென்னை கடற்கரை தாம்பரம் ஆகியவை.இவை தவிர சென்னை கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன.ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னையை கொல்கத்தா பெங்களூர் திருச்சி பாண்டிச்சேரி திருவள்ளூர் ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன.சென்னை கோயம்பேட்டில் உள்ள வௌதயூர் பேருந்து நிலையம் தெற்காசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும்.சுமார் 2773 பேருந்துகள் 375 வழித்தடங்கள் மூலம் சென்னை நகரின் பகுதிகளை இணைக்கின்றன.தென்கிழக்காசிய கண்ணாடி நூலிழை மையங்களுள் ஒன்றான சென்னை இந்தியாவில் தகவல் தொடர்பில் முதலிடம் வகிக்கிறது.அனைத்து தேசிய அனைத்துலக தொலைக்காட்சிகளும் சென்னையில் தெரிகின்றன.ஹலோ ரேடியோ ஒன் அஹா பிக் ரெயின்போ பண்பலை எப் எம் கோல்டு வானொலி அலைவரிசைகள் சென்னையிலிருந்து ஒலிபரப்பப் படுகிறது.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் டெக்கான் கிரானிக்கிள் ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் சென்னையில் அச்சிடப்படுகின்றன.சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும்.இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன.சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பல கலை அறிவியல் கல்லூரிகள் சென்னையில் உள்ளன.அவற்றுள் சென்னை மாநிலக் கல்லூரி லயோலா கல்லூரி வைஷ்ணவ் கல்லூரி விவேகானந்தா கல்லூரி போன்றவை குறிப்பிடத்தக்கவை.சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் National Depository Libraries ஒன்று.மற்ற இந்திய நகரங்களைப் போல சென்னையிலும் கிரிக்கெட்டே பிரபலமான விளையாட்டாகும்.சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது.1996 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment