Sunday, July 6, 2008

சென்னிமலை

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்.சென்னிமலை மூலவர் சுப்ரமணியசுவாமி பிறபெயர்.தண்டாயுதபாணி சிறப்பு மலைக்கோயில் உயரம் 1740 அடி படிகள் 1320 தல மரம் புளியமரம் தீர்த்தம் மாமாங்கம் ஊர் சென்னிமலை புராணபெயர்.புஷ்பகிரி மாவட்டம் பிரார்த்தனை கல்யாணத்தடை நீங்குகிறது.குழந்தை பாக்கியம் கைகூடுகிறது தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது.நோய் நீக்கம் துன்ப நீக்கம் ஆயுள் பலம் கல்வி அறிவு செல்வம் விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது தவிர காவடிஎடுத்தல் முடிக்காணிக்கை முதலியன கிருத்திகை அன்னதானம் காவடி எடுத்தல் பால்குடம் எடுத்தல் முடி இறக்கி காது குத்தல் சஷ்டி விரதம் இருத்தல்தவிர சண்முகார்ச்சனை முருக வேள்வி ஆகியவை செய்கிறார்கள்.கார்த்திகை விரதம் இருத்தல் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காக செய்யலாம்.கோயிலின் சிறப்பம்சம் மாமாங்கத் தீர்த்தம்.இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம்12 2.சிறப்பு மிகுந்த சஷ்டி விரதம் குழந்தை வரம் வேண்டுவோர் முறையாக சஷ்டி விதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்.சிரசுப் பூ உத்திரவு கேட்டல் திருமணம் வரன்கள் விவசாயம் கிணறுவெட்டுதல் புதிய வியாபாரம் தொடங்கல்.சிரசுப்பூ உத்திரவு நல்லபடியாக கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தொடங்குவதில்லை.சென்னிமலையின் விளக்கம் சென்னி மலை சிரகிரி சிரம் சென்னி கிரி மலை இம்மலையின் புராணபெயர்கள்.புஷ்பகிரி கரைகிரி மகுடகிரி தலவிநாயகர் திருச்சந்தி விநாயகர்சத்தியஞானி புண்ணாக்கு சித்தர்.மலைமேல் இவர் குகை உள்ளது.அம்மன் சந்நிதியிலிருந்து பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின் நாக்கு சித்தர் புண்ணாக்கு சித்தர் கோயில் வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது.இதன் அருகே சரவணமாமுனிவரின் சமாதிக் கோயிலும் உள்ளது.காவற்கடவுள் இடும்பன் தலபெருமைகள் முருகன் நடுநாயகமாக மூர்த்தியாக செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரைச் சுற்றி எட்டு நவகிரகங்கள் உள்ளன.மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு.கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம்.வள்ளி தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்யஅமிர்த வல்லி சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு.இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது.அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம்.முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம்.இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழி காட்டிய தலம்.இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது.அக்னி ஜாத மூர்த்தி இரண்டு தலைகள் உள்ள முருகன் என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.இவர் மிகவும் விசேஷமானவர்.கோயிலுக்கு பின்புறம் பிண்ணாக்கு சித்தர் குகை உள்ளது.தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத வேங்கை மரத் தேர் இத்தலத்தில் உள்ளது.அடர்ந்த மரங்கள் அடர்ந்த மலை மீது அமைந்துள்ள மிக அழகான அமைதியான சிறப்பு வாய்ந்த கோயில்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் ஈரோடு 27 கி.மீ. காங்கேயம் 18 கி.மீ.திருப்பூர் 40 கி.மீ.தங்கும் வசதி மலை உச்சிக்கு செல்ல கோயில் அடிவாரத்திலிருந்து கோயில் சார்பாக அடிக்கடி வாகன வசதி உண்டு.நகரில் தனியார் லாட்ஜ்கள் உள்ளன.கட்டணம் ரூ.150 முதல் ரூ.400 வரை.போக்குவரத்து வசதி ஈரோடு பழநி சாலையில் காங்கேயத்தை அடுத்து சென்னிமலை இருப்பதால் ஈரோடு பழநி பேருந்து போக்குவரத்து வசதி அதிகம் உள்ளது.அருகிலுள்ள ரயில் நிலையம் ஈங்கூர் ஈரோடு அருகிலுள்ள விமான நிலையம் கோவை முக்கிய திருவிழாக்கள் தைப்பூசத் திருவிழா 15 நாள் 30 ஆயிரம் பக்தர்கள் கூடுவர் பங்குனி.உத்திரம் 7 நாள் 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர் கந்த சஷ்டி.6 நாள் 5 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.மாதாமாதம் கிருத்திகை அன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.தவிர முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் விசேசமாக இருக்கும்.பொங்கல் தீபாவளி வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் இத்தலம் பக்தர்களின் வருகையால் நிரம்பி வழியும்.தல வரலாறு.சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம்.

No comments: