Saturday, July 5, 2008
சிதம்பரம்
அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில் சிதம்பரம் மூலவர் திருமூலநாதர் பெருமை ஆகாய தலம் அம்பாள் உமையாம்பிகை நடனசபை சிற்றம்பலம் தலமரம் தில்லைமரம் தீர்த்தம் சிவகங்கை பதிகம் தேவாரம் ஊர் சிதம்பரம் புராணபெயர்.தில்லை மாவட்டம் பிரார்த்தனை இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.நேர்த்தி கடன் பால் பழம் பொரி முதலியவற்றை நைவேத்தியம் செய்து.தீபாராதனை செய்து.இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம்.சுவாமிக்கு நல்லெண்ணெய்.திரவிய பொடி பால் தயிர் பழச்சாறு.இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் பன்னீர் திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம் கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது.அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம் புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம்.உண்டியல் காணிக்ககை செலுத்தலாம்.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.கோயிலின் சிறப்பம்சம் சிதம்பர ரகசியம் சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில்.இதில் உள்ள திரை அகற்றுப்பெறும்.ஆரத்தி காட்டப் பெறும்.இதில் உள்ள திரை அகற்றப்பெறும்.ஆரத்தி காட்டப் பெறும்.இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது.தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும்.மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும்.இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான்.அகண்ட பெருவௌதயில் நிறைந்திருக்கும் இறைவனை எந்த உருவில் வழிபடுவது நல்ல வெறும் வௌதயையே இறைவனாக இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது.பஞ்சபூத தலங்களில் இது ஆகாய தலமாக சிறந்து விளங்குவதும் இச்சிறப்பாலேயே.தில்லை இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது.தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை.கோயிலுக்குள் திருமூலட்டானக் கோயில் மேற்கு பிரகாரத்தின் மேல்பால் இருக்கின்றது.கருங்கல் வடிவத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது.சிதம்பரம் சித் + அம்பரம் = சிதம்பரம்.சித அறிவு அம்பரம் வெட்டவௌத.ஆகையால் இத்தலம் ஞானகாசம் என்னும் பெயர் உடையதாயிற்று.மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது.பின்பு உள்ளவற்றை எடுத்து பத்திரப்படுத்தினர்.இவ்வாறு கிடைக்கப்பெற்றதே தற்போது நாம் படிக்கும் தேவாரப் பதிகங்கள்.அத்தகைய அரிய தேவாரப்பதிகங்கள் கிடைத்த தலம் இது.தலபெருமைகள் பஞ்ச பூத தலங்களில் இது ஆகாய தலம் ஆகும்.மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது.திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய அருந்தவத் தலம்.நால்வர் இத்தலத்தில் எழுந்தருளியபோது நான்கு கோபுர வாயில்கள் வழியாக வந்தனர் என்கின்றனர்.கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் தெற்கில் ஞானசம்பந்தரும்ல மேற்கில் அப்பரும் வடக்கு கோபுரம் வழியாக சுந்தரரும் சென்று சிற்சபையில் இறைவனை கண்டு தரிசித்தனராம் இந்த ஊரின் தேரோடும் வீதிகளில் அப்பர் பெருமான் அங்கப்பிரதட்சணமே செய்தாராம்.இலங்கையை சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசர் நடராஜர் அருளால் பேசச் செய்த தலம்.இத்தலத்துக் திருக்கோயிலில் சிற்றம்பலம் பொன்னம்பலம் பேரம்பலம் நிருத்தசபை இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருத்தலும் சிவன் விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருத்தலும் தனிச் சிறப்புகளாகும்.பிரம்மா விஷ்ணு ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள திருத்தலம் இது.51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவ தலம் இது.மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலம்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் கடலூர் 50 கி.மீ.தங்கும் வசதி.கட்டணம் ரூ.200 முதல் 600 வரைபோக்குவரத்து வசதி பஸ்வசதி சிதம்பரம் நகரின் மத்திலேயே கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதில் சென்று வரலாம்.அருகில் உள்ள ரயில் நிலையம் சிதம்பரம்அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி முக்கிய திருவிழாக்கள் மார்கழி திருவிழா 10 நாள் திருவிழா திருவாதிரை உற்சவம் இத்தலத்தில் மிக விசேசமாக நடக்கும்.திருவாதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடி ஏற்றி பத்து நாள் விழா நடைபெறும்.இத்திருவிழாவில் ஒரு தனி விசேசம் உண்டு.சுவாமிக்கு விடையாத்தித் திருவிழா முடிந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாத்தித் திருவிழா நடைபெறும்.ஆனித்திருமஞ்சனம் 10 நாள் திருவிழா சுப்பிரமணியர் சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வௌளி தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள்.சித்திரை வருடப்பிறப்பு திருவாதிரை நட்சத்திரம் அமாவாசை முதலிய விசேச நாள்களில் நடராஜமூர்த்தி சிவகங்கையில் தீர்த்தம் கொடுத்தருள்வார்.மற்ற மாதங்களிலும் இவ்வாறு தீர்த்தம் கொடுத்தருள்வார்.சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரு மாதங்களில் மாதப்பிறப்பு பிரதோசம் வௌளிக்கிழமை திருவாதிரை கார்த்திகை அமாவாசை பௌர்ணமி ஆகிய நாட்களில் இரவு விழா நடைபெறும்.தேவாரப்பதிகம் பாடியோர் அப்பர் சுந்தரர் சம்பந்தர் மாணிக்கவாசகர் ஆகிய நால்வருமே இத்தலம் குறித்து தேவாரப் பதிகம் பாடியுள்ளனர்.இத்தலத்து முருகப்பெருமான் சுப்ரமணியர் குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்சுவாமியின் பெயர்கள்.மூலட்டானேசுவரர் சபாநாயகர் கூத்தப்பெருமான் விடங்கர் மேருவிடங்கர் தட்சிணமேருவிடங்கர் பொன்னம்பல கூத்தன்அம்பாளின் பெயர்.சிவகாமசுந்தரிதீர்த்தங்கள் சிவகங்கை பரமானந்த கூபம் வியாக்கிரபாத தீர்த்தம் அனந்த தீர்த்தம் நாகச்சேரி பிரம தீர்த்தம் சிவப்பிரியை புலிமேடு குய்ய தீர்த்தம் திருப்பாற்கடல் தல வரலாறு.இதையடுத்து மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார்.இங்குள்ள லிங்கத்தை தினமும் பூஜை செய்தார்.சுவாமி தங்கள் பூஜைக்காக பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க இருட்டில் மலர்கள் தெரியவில்லை.உடனே சுவாமி மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற உறுப்புகளும் இருளிலும் நன்றாகத் தெரியும்படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம் என்று கூறியருளினார்.மேலும் புலிக்கால் புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெயரும் வியாக்கிரபாதன் என்றும் கூறினார்.மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தினமும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார் என தல வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment