Sunday, July 13, 2008

பேருந்தில் சுற்றுலா


தற்போது வெளிநாட்டுப் பயணிகள் சீனாவில் பேருந்துப் பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர். தற்போது பெய்ச்சிங்-ஷாங்காய். மற்றும் பெய்ச்சிங்-சிஆன் என்ற 2 வழித்தடங்கள் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன. இது பற்றி சீன சர்வதேச சுற்றுலாப் பணியகத்தின் அதிகாரி கெவுவன்பிங் கூறியதாவது, பேருந்தில் பயணம் செய்வது என்பது, அது செல்லும் வழியில் உள்ள சுற்றுலா மேற்கெவுள்வதாகும். கடந்த சில ஆண்டுகளில் எங்கள் நாட்டின் உயர் வேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணி மும்முரமாக நடைபெற்றிருப்பதால் நெடுஞ்சாலை தெவுடர் அமைப்பு உருவாயிற்று. பயணிகள், பேருந்து மூலம் சுற்றுலா மேற்கெவுள்வதற்கு இது உறு துணை புரிகின்றது. பேருந்து மூலம் பெய்ச்சிங்-ஷாங்காய் நெடுஞ்சாலையில் சென்றால் வழியில், தியென்ஜின், தைய்சான், சியுஹு, சியுசோ, சூசோ ஆகிய நகரங்களைப் பயணிகள் பார்வையிட்டு, இறுதியில் ஷாங்காய் சென்றடைவார்கள். இதற்கு மெவுத்தம் 12 நாட்கள் தேவைப்படும். பெய்ச்சிங்கிலிருந்து சிஆன் செல்லும் வழியில், பௌதின், ஹென்தென், அன்யாங், சென்சோ, லோயாங், சான்மன்சியா ஆகியவற்றுக்கு ஊடாகச் சென்று, இறுதியில் சிஆன் சென்றடைவார்கள். இதற்கு 9 நாட்கள் பிடிக்கும் என்றார் அவர்.
தற்போது, சீனாவின் உயர் வேக நெடுஞ்சாலையோர நகரங்களிலும், காட்சித் தலங்களிலும் பயணிகளை வரவேற்கும் வசதிகள் அதிகரித்துள்ளன. தரமான பேருந்தில் ஏறி, வழி நெடுகிலும் நகரங்களையும் காட்சித் தலங்களையும் பார்வையிடுவது மிகவும் வசதியானது. மகிழ்ச்சி தரக் கூடியது. பேருந்து மூலம் சுற்றுலா மேற்கெவுள்ள விரும்பும் பயணிகள் நாள்தோறும் சுமார் 4 மணி நேரம் பேருந்தில் உட்கார்ந்திருக்க வேண்டும். ஒரு நகரை விட்டு, மற்றெவுரு நகரம் சென்றடைந்த பின்னர், பயணிகள் இந்நகரிலே ஓரிரு நாட்கள் தங்கியிருந்து சுற்றுலா மேற்கெவுள்வதற்குச் சுற்றுலாப் பணியகம் ஏற்பாடு செய்கின்றது என்று அவர் செவுன்னார். சீன சர்வதேச சுற்றுலாப் பணியகத்தின் வழிகாட்டி கௌவிவி எங்கள் செய்தியாளரிடம் பேசுகையில், பேருந்தில் சுற்றுலா என்னும் பயண முறையை வௌதநாட்டுப் பயணிகள் மிகவும் வரவேற்கின்றனர். ஏனென்றால், பயணிகள் நெடுஞ்சாலை நெடுகிலும் அமைந்துள்ள காட்சித் தலங்களை நன்கு பார்வையிடலாம். விமான மூலம் பயணம் மேற்கெவுள்வோருக்கு இத்தகைய அனுபவம் கிடையாது. குறிப்பாக, பெய்ச்சிங்-ஷாங்காய், பெய்ச்சிங்-சிஆன் ஆகிய இரு பாதைகளிலும் சுற்றுலாப் பயணம் செய்தால் வழியில் பார்க்கக் கூடிய இடங்கள் நிறைய உள்ளன என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, வழிகாட்டி செல்வி கௌ, பெய்ச்சிங்-ஷாங்காய் பேருந்துப் பாதையில் பணி புரிந்துவருகின்றார். இது பற்றி அவர் கூறியதாவது, பெவுதுவாகப், பண்டைக் காலக் கட்டடங்கள், பழங்காலச் சிறப்பு வாய்ந்த பண்பாடு ஆகியவற்றில் பயணிகள் அக்கறை காட்டுகின்றனர். பெய்ச்சிங்கில், பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகம், பெருஞ்சுவர் ஆகியவற்றையும், சான்துங் மாநிலத்து சியுஹு நகரில் கன்பூசியஸின் கோயில் மற்றும் கல்லறையையும் பார்வையிட அவர்கள் விரும்புகின்றனர். தவிர, சியுசோ நகரில் பண்டைக் காலக் கல்லறைகளைக் காணலாம். இறுதியில் முக்கிய சுற்றுலா இடமான சர்வதேச மாநகர் ஷாங்காயில் பெவுருட்களை வாங்குவது தவிர, வேறுபட்ட சுவையான உணவுகளையும் சுவைத்துப்பார்க்கலாம். பயணிகள் இதில் அக்கறை கெவுண்டுள்ளனர் என்றார் அவர்.

பெவுதுவாக கூறின், வௌதநாட்டுப் பயணிகள் பெய்ச்சிங், ஷாங்காய் ஆகிய இரு மாநகரங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். பேருந்தில் செல்வதற்குப் பதிலாக, விமானம் மூலம் இவ்விரு நகரங்களுக்குச் சென்றால், அவர்களில் பெரும்பாலோர் வழி சுற்றி சியுஹு, சியுசோ ஆகிய நகரங்களுக்குச் செல்ல மாட்டார்கள். ஆனால் உண்மையிலே இவ்விரு இடங்களும் பார்க்கத் தக்க இடம். சியுஹு நகரம், சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், பிரபல சிந்தனைவாதி கன்பூசியஸின் பிறந்த ஊராகும். அவருடன் தெவுடர்புடைய பண்டைக் காலச் சின்னங்கள் பல உள்ளன. இவற்றில், கன்பூசியஸின் பழைய இல்லம்- அது இப்போது கன்பூசியஸின் கோயில் மாற்றப்பட்டுள்ளது. கன்பூசியஸின் குடும்ப மாளிகை, கல்லறை ஆகியவை குறிப்பிடத் தக்கவை. சியுசோ நகரில் பாதுகாக்கப்பட்டுள்ள பண்டைக்காலக் கல்லறைகள் பல உள்ளன
சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 5 குடும்பக் கல்லறைகள் உள்ளன. ஒவ்வெவுரு முறையும் பயணிகளைக் கூட்டிக் கெவுண்டு இந்தப் பண்டைக் காலக் கோயில்களையும் கல்லறைகளையும் காட்டிய பேவுது, பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர் என்றார் வழிகாட்டி கௌவிவி. அடுத்து, சுற்றுலா பற்றிய தகவலை வழங்குகிறோம். பெய்ச்சிங் மாரத்தன் ஓட்டப் போட்டி நேயர்களாகிய நீங்கள், பெய்ச்சிங் சர்வதேச மாரத்தன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகெவுள்ள விரும்பினால், சீன சர்வதேச சுற்றுலாப் பணியகத்துடன் தெவுலைபேசி மூலம் தெவுடர்பு கெவுண்டு விண்ணப்பம் செய்யலாம். தெவுலைபேசி எண் 00861065221638 அல்லது 00861085228503. உங்களுடைய கோரிக்கைக்கிணங்க, ஹோட்டல் அறை பதிவு செய்யப்படும். மாரத்தன் ஓட்டப்போட்டிக்குப் பின்னர் பெய்ச்சிங்கில் சுற்றுலா செல்ல வசதி வழங்கப்படும். தவிர, சீனாவின் இதர இடங்களுக்கும் நீங்கள் சுற்றுலா செல்லலாம்.

No comments: