பெரும்பாலான பயணிகள் மலை வளமும் நீர் வளமும் உள்ள இடங்களில் சுற்றுலா மேற்கொள்ள விரும்புகின்றனர். இத்தகைய வளம் மிக்க வூயி மலைக்கு இன்று நான் நேயர்களுடன் சேர்ந்து, சுற்றுலா செல்லப்போகிறேன். சரிதானே! வூயி மலையின் காட்சி எழில் பற்றி குறிப்படும் போது, சீனாவின் எழுத்தாளர் ஒருவர் தமது நூலில் அமெரிக்க முதியவர் ஒருவரின் கூற்றைப் பயன்படுத்தினார். அதாவது, உலகின் எந்த ஒரு இடத்திலும் செல்லும் போது திசை தெரியாமல் இருந்தால், சீனாவின் வுச்சியென் மாநிலத்தின் வூயி மலைக்கு என்னைக் கொண்டு செல்லுங்கள் என்றார் அவர். அமெரிக்க முதியவர் இவ்வளவு விரும்பும் மலை, தென் கிழக்கு சீனாவின் வுச்சியென் மாநிலத்தில் அமைந்துள்ளது. சீனாவில் இந்த புகழ்பெற்ற மலையை ஐ.நா.யுனெஸ்கோ அமைப்பு கடந்த நூற்றாண்டின் முடிவில் உலகப் பண்பாட்டு மற்றும் இயற்கை மரபுச் செல்வப் பட்டியலில் சேர்த்துள்ளது.
வூயி மலையை ஆறு சூழ்ந்துள்ளது. ஆறு நெடுகிலும் செங்குத்தான விசித்திரமான மலை, பளிங்கு போன்ற நீரில் பிரதிபலிக்கிறது. இது எழில் மிக்க ஓவியமொன்றை உருவாக்கியுள்ளது. வூயி மலை நகரின் சுற்றுலா பணியகத் தலைவர் யு செலான் கூறியதாவது, மலையும் ஆறும் நன்கு இணைந்திருப்பது என்பது, வூயி மலையின் தனிச்சிறப்பாகும். பயணிகள் வூயி மலைக்குச் செல்லும் போது, தலை நிமிர்ந்துபார்த்தால் மலையைக் கண்டுகளிக்கலாம். தௌதந்த நீரைக் கையால் தொடலாம். சலசலவென்று ஓடும் நீரின் சத்தம் காதில் விழும். இது தான் சுற்றுலா உணர்வு என்றார் அவர். பயணிகள் மலையில் ஏறும் போது, பல ஏரிகளைக் கண்டுகளிக்கலாம். இவற்றில் தியெயு மலை ஒன்றாகும். வூயி மலையில் ஒரு பழமொழி பரவிவருகின்றது. அதாவது, தியெயு மலைக்குச் செல்லாவிட்டால் வூயி மலையில் சுற்றுலா மேற்கொள்ளவில்லை என்று அர்த்தம். பயணிகள் தியெயு மலைச் சிகரத்தில் நின்றவாறு தூரத்தில் பார்க்கும் போது, அதன் சுற்றுப்புறத்திலுள்ள கம்பீரமான மலைகளை மட்டுமல்ல, மலை அடிவாரத்தில் பாய்ந்து ஓடும் ஆறுகளையும் கண்டுகளிக்கலாம். தியெயு மலை, உண்மையில் ஒரு மாபெரும் கற்பாறையாகும். சுமார் 500 மீட்டர் உயரமும் 1000 மீட்டர் அகலமும் கெவுண்ட தியெயு மலை, வூயி மலைப் பகுதியில் மிகப் பெரிய கற்பாறையாகும். நீண்ட காலமாக, மழை நீர் பாய்ந்து வடிந்த அடையாளங்கள் இந்த பாறையில் காணப்படுகின்றன. எழில் மிக்க வூயி மலைக் காட்சியினால் பண்டை கால தெய்வங்கள் இதை விட்டுச் செல்ல விரும்பவில்லை. இன்றும் பல பயணிகளையும் அது ஈர்த்துவருகின்றது. சீனாவின் தைவான் மாநிலத்தைச் சேர்ந்த மங்லின்ச்சுன் இப்பயணிகளில் ஒருவராவார்.
அவர் கூறுகின்றார், இந்தக் கற்பாறை தனிச்சிறப்பு வாய்ந்தது. தைவானில் இத்தகைய கற்பாறை காணப்படவில்ல. தைவானிலுள்ள மலைகள், வெறும் குன்றுகள் தான். பொதுவாக மேடை போன்றதே இருக்கும். அவ்வளவு எளிமையானது. வூயி மலை, இயற்கையின் சிறப்புப் பொருள் என்று கூறலாம். மலையின் பக்கத்தில் ஆறு ஓடுவது மிகவும் அழகானது என நான் கருதுகின்றேன் என்றார் அவர். வூயி மலையை, எலும்பு என்றால், ஆற்று நீரை அதன் ஆத்மா என்று கூறலாம். வூயி மலையின் அடிவாரத்தில் ஓடும் ஆறு, சியுசியெ ஆறு என்று அழைக்கப்படுகின்றது. சியுசியெ ஆறு மேற்கிலிருந்து தொடங்கி, கிழக்கை நோக்கி மலைத்தொடர்களிடையில் சுற்றிச்சுற்றிவருகின்றது. பயணிகள் மூங்கில் படகில் ஏறிச் சென்று, வூயி மலையின் அழகான காட்சியை ரசிக்கலாம். வூயி மலையின் ஆத்மா என்று அழைக்கப்படும் சியுசியெ ஆறு எங்கே தோன்றுகிறது என்பது பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில் படகோட்டி ஹென்யுன்பு கூறியதாவது, சியுசியெ ஆற்று நீர், அதன் மேற் பகுதியிலுள்ள இயற்கைப் பாதுகாப்பு மண்டலத்திலிருந்து வருகின்றது. அவ்விடம் எல்லாம் கன்னிக்காடு. பறவைகளின் சுவர்க்கம் என்று கருதப்படுகின்றது. பூச்சிகளின் உலகம், குரங்குகளின் பிறந்தகம் என்று கருதப்படுகின்றது என்றார்
வூயி மலை இயற்கைப் பாதுகாப்பு மண்டலம், தென் கிழக்கு சீனாவில் இதுவரை மிகவும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ள அளவில் மிகப் பெரிய மத்திய ஆசிய வெப்ப மண்டல காட்டு உயிரின வாழ்க்கைத் தொகுதியாகும். சீனாவின் 5 பெரிய இயற்கைப் பாதுகாப்பு மண்டலங்களில் ஒன்றாகும். பூகோளத்தில் ஒரே அக்ஷ ரேகையில் மிகவும் நன்றாகப் பாதுகாக்கப்பட்டுள்ள பசுமையான இடம் இது. இம்மண்டலத்தின் மொத்த நிலப்பரப்பு சுமார் 560 சதுரகிலோமீட்டர் ஆகும். அதன் சுற்றுப்புறத்தில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்புடைய கன்னிக்காட்டில் அதிகமான விலங்குகளும் தாவரங்களும் உள்ளன. இவ்விடத்தை, உலக உயிரினங்களின் ஜன்னல் என சீன மற்றும் வௌதநாட்டு உயிரியல் நிபுணர்கள் பாராட்டுகின்றனர். இங்குள்ள சூழல் மனிதருக்கு ஏற்றது. காற்று தூய்மையானது.
No comments:
Post a Comment