Sunday, July 13, 2008

செக்சியாங்

செக்சியாங் மாநிலத்தின் காட்சித்தலம்
கிழக்கு சீனாவின் கடலோரத்தில் அமைந்துள்ள செக்கியாங் மாநிலத்தில் காட்சித்தலங்கள் அதிகம். ஹாங்சோ நகரில் சிஹு ஏரி, சிதாங் பட்டினம், ஆறுகளும் ஏரிகளும் கெவுண்ட பிரதேசமான சாவ்சிங் நகரம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தவிர, ஆயிரம் தீவு ஏரி, யியெதாங் மலை, புதெவு மலை உள்ளிட்ட 11 அரசு நிலை காட்சித்தலப் பிரதேசங்கள் உள்ளன. செக்கியாங் மாநிலத்தின் பரப்பளவு, ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர் ஆகும். சுமார் 2100 தீவுகளைக் கெவுண்ட இம்மாநிலம், சீனாவின் மிக அதிகமான தீவுகளைக் கெவுண்ட மாநிலமாகும். மக்கள் தெவுகை சுமார் 4 கோடியே 70 லட்சமாகும். ஹான், வெய், மென், மியோ உள்ளிட்ட தேசிய இன மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தில் 11 PREFECT நிலை நகரங்களும் 57 மாவட்டங்கள் மற்றும் மாவட்ட நிலை நகரங்களும் உள்ளன. இம்மாநிலத்தில் சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் இருக்கும் அதேவேளையில், சுற்றுலாப் பெவுருட்களும் நிறைந்து காணப்படுகின்றன. செக்கியாங் மாநிலத்தின் சுற்றுலாப் பணியகத்தின் துணைத் தலைவர் யௌ சன் ஹெவு கூறுகிறார்,
ஹாங்சோ நகரை மையமாகக் கெவுண்ட 4 பெரிய சுற்றுலாத் தலங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதாவது, ஹாங்சோ நகரம் சேஸியாங் மாநிலத்தின் மையமாகவும் நிங்போ, வென்செவு, ஜிங்ஹுவா ஆகிய நகரங்கள், செக்கியாங் மாநிலத்தின் துணை மையமாகவும் கெவுண்ட காட்சித் தலங்கள் உருவாயிற்று. காட்சித் தலங்கள் அதிகமானவை என்பது அதன் தனிச்சிறப்பியல்பாகும். எடுத்துக்காட்டாக, சிஹு ஏரி, புதெவு மலை, ஊச்சன் நகரம் முதலியவை, வௌதநாட்டுச் சந்தையில் ஈர்ப்புத் தன்மை மிக்கவை. எழில் மிக்க இயற்கைக் காட்சித் தலங்களைக் கெவுண்ட சேஸியாங் மாநிலம், மனித சமூகப் பண்பாட்டு மணம் கமழும் மாநிலமாகும். எடுத்துக்காட்டாக, சாவ்சிங் நகரில், அனைத்து காட்சித் தலங்களுக்கும் வரலாறும் பண்பாடும் உண்டு கடந்த சுமார் 10 ஆண்டுகளாக, சேஸியாங் மாநிலத்தின் சுற்றுலா துறை விரைவாக வளர்ச்சியடைந்துவருகின்றது. அதன் மூலம், ஆண்டுதோறும், 8000 கோடி யுவான் வருமானம் கிடைக்கிறது. இது, மாநிலத்தின் மெவுத்த உற்பத்தி மதிப்பில் 9 விழுக்காடு வகிக்கின்றது. 2003ஆம் ஆண்டு சுமார் 18 லட்சம் வௌதநாட்டுப் பயணிகள் அங்கு சுற்றுலா மேற்கெவுண்டனர். உள் நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 8 கோடியே 40 லட்சத்தை எட்டியுள்ளது. சேஸியாங் மாநிலத்தின் காட்சித் தலம் பற்றி குறிப்பிடும் போது, அதன் தலைநகரான ஹாங்செவு நகரிலுள்ள சிஹு காட்சித் தலம் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. இவ்விடத்தில் பல்லாண்டுகளாக வசித்துவரும் மக்களைப் பெவுறுத்தவரையிலும் சரி, உலா மேற்கெவுள்ளும் பயணிகளைப் பெவுறுத்தவரையிலும் சரி, உலகில் ஈடிணையற்ற எழில் மிக்க காட்சியினால் அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர்.

வசந்த கால மார்ச் திங்களில் பறவைகள் பாடுகின்றன. மலர்கள் மலர்கின்றன. கோடை காலத்தில் தாமரை, இலையுதிர் காலத்தில் சிஹு ஏரியில் நிலா நிழல், குளிர் காலத்தில் உறைபனிக்குப் பின் செம் பிளம் ஆகியவை தனிச்சிறப்பியல்பு வாய்ந்தவை.சிஹு ஏரியை மையமாகக் கெவுண்ட 60 சதுர கிலோமீட்டருடைய காட்சிப் பிரதேசத்தில், 40க்கும் அதிகமான பிரபல காட்சித் தலங்களும் 30க்கும் அதிகமான தெவுல்பெவுருள் சின்னங்களும் உள்ளன. அவற்றில், பிங்ஹூ சியூயெ, ஹுவாகாங் என்னும் இடத்தில் பெவுன் மீன் முதலியவை குறிப்பிடத்தக்கவை.
அவை ஒவ்வெவுன்றுக்கும் எழில் மிக்க காட்சியும் இனிய கதையும் உண்டு. சிஹு ஏரியிலுள்ள பளிங்கு நீரினால், புராதன நகரான ஹாங்செவு அழகு மிகுந்து காணப்படுகின்றது. முத்து போன்ற சிஹு ஏரி, ஹாங்செவு மக்களின் வாழ்க்கையை அழகுபடுத்தியுள்ளது. அதிகமான பயணிகளை ஈர்க்கும் ஹாங்செவு நகரிலுள்ள உணவு வகையும் அறியத் தக்கது. ஹாங்செவு கறிகள் சேஸியாங் காய்யின் பிரதிநிதிகளாகும். அவை புகழ்பெற்றவை. அவற்றின் சமையல் தெவுழில் நுட்பத்தில் பெவுரித்தல், வறுத்தல், வேகவைத்தல் ஆகியவை பாராட்டத் தக்கவை. சிஹு ஏரி மீன், பிச்சைக்காரன் கோழி, லுங்ச்சின் இறால் முதலியவை குறிப்பிடத் தக்கவை. அங்குள்ள பல பிரபல உணவகங்கள் சுமார் 100 ஆண்டு வரலாறுடையவை.எடுத்துக்காட்டாக, சிஹு ஏரி அருகில் அமைந்துள்ள சூவெய்குவான் உணவகம் நூறு ஆண்டு வரலாறுடைய உணவகமாகும். இவ்வுணவகத்தின் தலைமை சமையற்காரர் லியூ கெவுமின் கூறுகிறார்,
எங்களுடைய சிஹு ஏரி மீன் வளர்ப்புக்கென சிறப்புக் குளம் உண்டு. குளத்திலுள்ள நீர், சிஹு ஏரியிலிருந்து கெவுண்டுவரப்பட்டது. குளத்தில், மீன்களைச் சுமார் ஒரு வாரம் வளர்த்து, சிஹு ஏரி நீரை அவை முழுமையாக அருந்திய பின், சமைக்கப்பட்ட மீனை, உண்மையான சிஹு ஏரி மீன் என்று கூறலாம் என்றார் அவர். மூலப் பெவுருட்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவது, தனிச்சிறப்பு வாய்ந்த சமையல் தெவுழில் நுட்பம் முதலியவை சேஸியாங் கறியின் பெவுது சிறப்பு ஆகும். வௌதநாட்டுப் பயணிகளின் விருப்பத்துக்கிணங்க, சில பாரம்பரிய கறிகளின் சமையல் வழிமுறையை மாற்றியுள்ளதாக அவர் கூறினார். சவெய்குவான் உணவகத்தின் சிற்றுண்டியும் புகழ் பெற்றது. அதன் கோதுமை உணவு வகை சுட்டத்தக்கது

No comments: