Tuesday, July 8, 2008
ஈபெல் கோபுரம்
ஈபெல் கோபுரம்.ஈபெல் கோபுரம்ஈபெல் கோபுரம் பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும்.அத்துடன்.உலகம் முழுவதிலும் இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது.இதை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபெல்ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக் கோபுரம் முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க வருகிறார்கள்.இக் கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002 நவம்பர் 28 ஆம் திகதி பெற்றது.பொருளடக்கம் [மறை].1 அறிமுகம்.2 நிகழ்ச்சிகள்.3 பிரதிபண்ணல்களும் போலிகளும்.4 அணுகுவழி.5 வௌத இணைப்புகள்.அறிமுகம்.1987 தொடக்கம் 1989 வரையான காலப்பகுதியில் இவ்வமைப்பு பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் 1889 என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது.1889 மார்ச் 31 ஆம் திகதி தொடக்கவிழா நடைபெற்று மே 6 இல் திறந்துவிடப்பட்டது.300 உருக்கு வேலையாட்கள்.5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி 18 038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தினார்கள்.அக்காலத்திய பாதுகாப்புத் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது இதன் கட்டுமானக் காலத்தில் உயர்த்திகளைப் பொருத்தும்போது.ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.இக் கோபுரம் அதன் உச்சியிலுள்ள 20மீட்டர் உயரமுள்ள தொலைக்காட்சி அண்டெனாவைச் சேர்க்காது 300 மீட்டர்கள் 986 அடிகள் உயரமானதும் 10 000 தொன்களிலும் 2 கோடியே 10 இலட்சம் இறாத்தல் கூடிய நிறையை உடையதுமாகும்.இது கட்டிமுடிக்கப்பட்டபோது உலகின் அதிக உயரமான அமைப்பு இதுவேயாகும்.இதன் பராமரிப்புக்காக ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 தொன்கள் கடும் மண்ணிறப் பூச்சு மை பயன்படுத்தப்படுகிறது.வெப்பநிலைமாறும் போது உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக ஈபெல் கோபுரத்தின் உயரத்தில் பல சதம மீட்டர்கள் வேற்பாடு ஏற்படுகின்றது.இது கட்டப்பட்ட காலத்தில் எதிர்பார்க்கக் கூடியவகையில் பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது.பலர் இது பார்வைக்கு அழகாக இராதென்றே கருதினார்கள்.இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது.ஆரம்பத்தில் இக் கோபுரத்தை 20 ஆண்டுகள் அவ்விடத்தில் நிறுத்திவைப்பதற்கு ஈபெல் அநுமதி பெற்றிருந்தார்.எனினும் தொடர்புகளுக்கு இது மிகவும் பெறுமதி மிக்கதாக இது இருந்ததனால் அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னும் கோபுரம் அங்கே நிற்க அனுமதிக்கப்பட்டது.நிகழ்ச்சிகள்.ஜனவரி 12 1908 ல் முதலாவது தொலைதூரத் தகவல் வானொலி கோபுரத்திலிருந்து அனுப்பப்பட்டது.1929 ல் கிறிஸ்லெர் கட்டிடம் நியூ யோர்க்கில் கட்டி முடிக்கப்பட்டபோது ஈபெல் கோபுரம் உலகின் அதி உயர்ந்த அமைப்பு என்ற பெயரை இழந்தது.அடொல்ப் ஹிட்லர் [[இரண்டாவது உலக யுத்தத்தின்போது பாரிஸுக்கு விஜயம் செய்தபோது அவர் 1792 படிகளையும் ஏறியே உச்சிக்குச் செல்லட்டும் என்பதற்காக பிரெஞ்சுக்காரர் அதன் உயர்த்திகளைச் செயலிழக்கச் செய்தனர்.அதனைப் பழுதுபார்க்கத் தேவைப்படும் உதிரிப்பாகத்தைப் பெற்றுக்கொள்வது.யுத்தச் சூழலில் முடியாது என்று கருதப்பட்டதெனினும் நாஸிகள் புறப்பட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே அது செயல்படத் தொடங்கிவிட்டது.ஹிட்லர் கீழேயே நின்றுவிட்டுச் சென்றுவிட்டார்.ஜனவரி 3 1956 ல் தீயொன்றினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.1959ல் தற்போதுள்ள வானொலி அலைவாங்கி அதன் உச்சியில் பொருத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment