Monday, July 7, 2008
ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்டம்.தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் திராவிட கழகத்தின் நிறுவனர் E.V.ராமசாமியின் பெயரால் அழைக்கப்படுகிறது.இங்கு சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் இரண்டும் இங்கு உள்ளது இதன் சிறப்பு.இந்த மாவட்டம் கோயமுத்தூரிலிருந்து சுமார் 92 கி.மீ. தூரத்தில் உள்ளது.புகழ் பெற்ற பன்னாரி அம்மன் கோவில் இங்கு உள்ளது.பவானி.பவானி ஆற்றின் கரையில் உள்ள இந்த ஊரில் சங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது.காவிரி மற்றும் பவானி நதிகள் இங்கு சங்கமம் ஆவதால் இதற்கு Triveni of South India என்று அழைக்கப்படுகிறது.சென்னிமலை.கைத்தறி நெசவு தொழிலுகுரிய முக்கிய இடம்.மலைகளுக்கு நடுவில் சுப்ரமண்ய சாமி கோயில் உள்ளது.இங்கு உள்ள முருகர் கடவுளுக்கு ஆறு முகங்கள் உண்டு.ஆனால் இச்சிலை சேதமடைந்துள்ளதால்.தண்டாயுதபாணி சிலைக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.கொடுமுடி.இங்குள்ள கோயிலில் சிவன் விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒரே கோவிலில் உள்ளது இதன் சிறப்பு.சிவனுக்கு முச்சுகுண்டேஸ்வரர் என்றும் விஷ்ணுக்கு வீரநாராயண பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment