Tuesday, July 8, 2008

இணுவில்

இணுவில் இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒர் ஊர் ஆகும்.இது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது.இவ்வீதி இந்த ஊரைக் கிழக்கு இணுவில் மேற்கு இணுவில் என இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது.இணுவிலுக்கு வடக்கில் சுன்னாகமும் கிழக்கில் உரும்பராயும் தெற்கில் கோண்டாவிலும் மேற்குத் திசையில் சுதுமலையும் அமைந்துள்ளன.வேளாண்மைச் செய்கைக்கான சிறு தோட்டங்கள் நிறைந்துள்ள இவ்வூர் புகையிலைச் செய்கைக்குப் பெயர் பெற்றது.அமெரிக்க மிஷனால் நிறுவப்பட்ட மகப்பேற்று மருத்துவமனையான மக்லியொட் மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றது.பொருளடக்கம் [மறை].1 இணுவிலில் அமைந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்.2 இணுவில் தந்த புகழ் பூத்தோர்.3 இணுவிலில் அமைந்துள்ள கோயில்கள்.4 வௌத இணைப்புக்கள்.இணுவிலில் அமைந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்.பொன்.இராமநாதன் மகளிர் கல்லூரி.யாழ்.பலகலைக்கழக இசை நுண்கலைப்பிரிவு.இணுவில் தந்த புகழ் பூத்தோர்.இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இலக்கண இலக்கிய நூலாசிரியர்.வி. தெட்சணாமூர்த்தி தவில் வித்வான்.இணுவில் சின்னராசா தவில் வித்வான்.இணுவில் வீரமணி ஐயர்.சாகித்ய கர்த்தா நடன ஆசிரியர்.ஆர். சிவலிங்கம் உதயணன் சிறுகதை.நாவல் எழுத்தாளர்.கே. எஸ். ஆனந்தன் நாவலாசிரியர்.இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் எழுத்தாள்ர்.இணுவிலில் அமைந்துள்ள கோயில்கள்.புகழ் பெற்ற பழமை வாய்ந்த இந்துக் கோயில்கள் பல இவ்வூரில் அமைந்துள்ளன.இவற்றுள் சிறப்பு வாய்ந்தவை வருமாறு.கந்தசாமி கோயில்.சிவகாமி அம்மன் கோயில்.பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்.செகராஜசேகரப் பிள்ளையார் கோயில்.இணுவில் இளந்தாரி கோயில்.இணுவில் கிழக்கு கப்பனைப் பிள்ளையார் கோயில்.அரசோலைப் பிள்ளையார் கோயில் எனவும் வழங்கப்படுகின்றது.

No comments: