Monday, July 7, 2008

திருக்கொண்டீஸ்வரம்

அருள்மிகு சாந்தநாயகி சமேத பசுபதீஸ்வரர் திருக்கோயில்.திருக்கொண்டீஸ்வரம்.மூலவர் பசுபதீஸ்வரர் அம்மன் சாந்த நாயகி தல விருட்சம் வில்வம் ஊர் திருக்கொண்டீஸ்வரம் மாவட்டம் திருவாரூர் பொது தகவல்கள் திறக்கும் நேரம் காலை 9 முதல் 12 வரையிலும் மாலை 4 முதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும்.இருப்பிடம் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ. துணரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.கும்பகோணத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு நன்னிலம் வழியாக செல்லும் பஸ்சில் செல்லலாம்.போன் 04366 228 033.அருகிலுள்ள ரயில் நிலையம் தஞ்சாவூர்அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி கோயிலின் சிறப்பம்சம் கொண்டி என்றால் துஷ்ட மாடு என்று பொருள்.கொண்டி வழிபட்டதால் இத்தலம் கொண்டீஸ்வரம் என அழைக்கப்படுகிறது.சுவாமி மண்டபத்தில் உள்ள ஒரு துணணில் மூன்று தலைகள் மூன்று கால்களுடன் ஜஸரஹரேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து.அன்னத்துடன் மிளகுரசம் வைத்து வழிபட்டால் பரிபூரண குணமாகிவிடுகிறது.ஜேஷ்டாதேவி அம்பாள் சன்னதிக்கும்.சுவாமி சன்னதிக்கும் இடையில் வௌ஢ளைக்கல்லால் செய்யப்பட்ட மிகப்பழமையான ஜேஷ்டாதேவி அருள்பாலிக்கிறாள்.ஜேஷ்டா.என்றால் மூதேவி என்று அர்த்தம்.இத்தலத்தில் ஜேஷ்டாதேவி அனுக்கிரக தேவதையாக இருந்து திருமணத்தில் தடை உள்ளவர்களுக்கும்.புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும்.கடன் தொல்லை உள்ளவர்களுக்கும் அவர்களது பிரச்னைகளை நீக்கி அருள்பாலித்து வருகிறாள்.சுற்றுப்பகுதிகளில் விநாயகர் தட்சிணாமூர்த்தி சுப்பிரமணியர் மகாலட்சுமி சண்டிகேஸ்வரர் நவக்கிரகங்கள் பைரவர் திருநாவுக்கரசர் சன்னதிகளும் உள்ளன.முக்கிய திருவிழாக்கள் கார்த்திகை மாதம் வியாழக்கிழமை எமகண்ட நேரத்தில் இறைவன் தீர்த்த வாரி வழங்குவார்.இதில் பங்குகொள்பவர்களின் பாவம் நீங்கி சுக வாழ்வு அமையும் என்பது ஐதீகம் தல வரலாறு ஜேஷ்டாதேவி எனப்படும் தெய்வம் திருச்சி தஞ்சாவூர் மாவட்டங்களில் காணப்படுவாள்.ஸ்ரீதேவியான சீதேவி லட்சுமியின் சகோதரியான இவள் மூதேவி மூத்ததேவி என்றும் சொல்லப்படுவாள்.இவளை யாரும் தரிசிப்பதில்லை.இவள் வழிபாட்டுக்கு உரியவள்.சோம்பல் இல்லாத சுறுசுறுப்பான வாழ்வைத் தர வேண்டும் என இவளிடம் பிரார்த்திக்க வேண்டும்.இவ்வாறு அனுக்கிரகம் அருளும் மூர்த்தியாக இவள் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் திருக்கொண்டீஸ்வரம் சிவாலயத்தில் அருள்பாலிக்கிறாள்.சிவபெருமான் தன்னை பூமியில் உள்ள மனிதர்கள் வழிபட்டு மேன்மை அடைய வேண்டும் என்பதற்காக வில்வாரண்யத்தில் மறைந்திருந்தார்.அதைக்கண்ட பசு லிங்க வடிவில் இருந்த இறைவனின் தலையில் பால் சொரிந்து காயத்தை ஆற்றி வழிபட்டது.பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் லிங்கத்தில் நாம் காணலாம்.

1 comment:

Sriraman said...

கும்பகோணத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு நன்னிலம் வழியாக செல்லும் பஸ்சில் செல்லலாம். (தூத்துக்குடி கிராமம் இறங்க)