Monday, July 7, 2008
மருதமலை
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்.மூலவர் சுப்ரமணியசுவாமி பிறபெயர்.மருதாச்சலமூர்த்தி சிறப்பு மலைக்கோயில் சித்தர் பாம்பாட்டிசித்தர் தலமரம் மருதமரம் தீர்த்தம் மருததீர்த்தம் ஊர் மருதமலை புராணபெயர்.மருதவரை பிறபெயர்.மருந்துமலை மாவட்டம் பிரார்த்தனை முருகனை மனமுருக வேண்டிக்கொண்டால் கல்யாண பாக்கியம் குழந்தை பாக்கியம் ஆகியவை கைகூடுகின்றன.நோய் நீக்கம் ஆயுள் பலம் கல்வி அறிவு செல்வம் வேண்டுதல் விவசாயம் செழிப்பு உத்தியோக உயர்வு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.நேர்த்தி கடன் அபிஷேகம் கிருத்திகை அன்னதானம் காவடி எடுத்தல் பால்குடம் எடுத்தல் மொட்டை எடுத்தல் பொங்கல் படைத்தல் சுவாமிக்கு சந்தனகாப்பு பஞ்சாமிர்த அபிசேகம் பால் அபிசேகம் அன்னதானம் வழங்குவது நெய் விளக்கு ஏற்றுதல் பால்குடம் எடுத்தல் காவடிஎடுத்தல் அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.தவிர சண்முகார்ச்சனை கார்த்திகை விரதம் இருத்தல் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் இறைவனுக்கு செய்யலாம்.வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.கோயிலின் சிறப்பம்சம் பாம்பாட்டி சித்தர் இவர் தன் ஆத்ம சக்தியால் இறைவனின் அருள் பெற்று பல கூடுவிட்டு கூடு பாயும் சித்து வேலைகள் செய்யும் கலை பெற்றார்.தம் சித்து விளையாட்டால் பாம்புகளை ஆட்டுவித்ததால் பாம்பாட்டி சித்தர் என்று பெயர் பெற்றார்.இவர் இம்மலையிலேயே வாழ்ந்து வீடு பேறு அடைந்தார்.பாம்புக்கு பக்தர்கள் நாளும் பாலும் பழமும் அளித்து வருகின்றனர்.பாம்பாட்டி சித்தரை வழிபடும் அன்பர்களுக்கு நஞ்சினால் ஏற்படும் நோய்கள் நீங்கும்.இச்சித்தரை வழிபட்டால் அமைதியின்றி வாழ்வோர் அமைதியான வாழ்க்கையைப் பெறுவார்.தலபெருமைகள் முருகனின் ஏழாவது படைவீடு என்று பக்தர்களால் அழைக்குமளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த முருகன் கோயில்.பாம்பாட்டி சித்தர் வசித்த சிறப்பு வாய்ந்த தலம் மருத மரத்தடியில் முருகன் பாம்பாட்டி சித்தருக்கு மருத தீர்த்தமாக காட்சி தந்த தலம்.கோயில் அமைந்துள்ள மருத மலை மூலிகை மரங்கள் அடர்ந்தது.திருமூலர் கச்சியப்ப முனிவர் பேரூர் புராணத்தில் சிறப்பாகப் பாடப்பெற்ற மலை மருதமலை அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் மருதமலை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.பழம்பெரும் திரைப்படத்தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்ப தேவரால் பெரும் புகழ் பெற்ற தலம்.500 அடி உயரத்தில் மூலிகை மரங்கள் அடர்ந்த மலையின் மீது இருக்கும் எழில் மிகுந்த முருகன் கோயில்.வரும் பக்தர்களின்மனதிற்கு மிகுந்த அமைதியைத் தரும் அற்புதமான தலம்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் கோவை 12 கி.மீ.பேரூர் 16 கி.மீ.தங்கும் வசதி கோயில் சார்பாக தேவஸ்தான விடுதி உள்ளது.கட்டணம் ரூ.30.கட்டணம் ரூ.300 முதல் ரூ.1000 வரை.போக்குவரத்து வசதி.குடும்பத்தோடு வருகிறவர்கள் கோவையிலிருந்து மருதமலைக்கு செல்லலாம்.மலையின் அடிவாரத்திலிருந்து கோயிலுக்கு தேவஸ்தானம் சார்பாக மினி பஸ்கள் இயக்கப் படுகின்றன.அருகிலுள்ள ரயில் நிலையம் கோவை.அருகிலுள்ள விமான நிலையம் கோவை முக்கிய திருவிழாக்கள் தைப்பூசப் பெருவிழா தை மாதம் 10 நாள் திருவிழா 5லட்சம் பக்தர்கள் கூடுவர்.கார்த்திகை தீபம் 1 நாள் 2லட்சம் பக்தர்கள் கூடுவர்.கந்த சஷ்டி.6 நாள் உற்சவம் ஐப்பசி மாதம் பெருமளவில் பக்தர்கள் கூடுவர்.கிருத்திகை தமிழ்வருடப் பிறப்பு ஆங்கில வருடப் பிறப்பு நாட்களிலும் தீபாவளி பொங்கல் போன்ற விசேச நாட்களில் பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.தல வரலாறு பதினெட்டுச் சித்தர்களில் ஒருவர் பாம்பாட்டி சித்தர்.காலம் 12 ம் நூற்றாண்டு பாம்பாட்டி சித்தர் இம்மலையில் தவம் புரிந்தார்.முருகன் வள்ளி தெய்வானையுடன் ஆதிமூலஸ்தானத்தில் குடிகொண்டார்.மூலஸ்தானத்திற்கும் சித்தர் குகைக்கும் ஆதிமூலஸ்தானத்திற்கும் சுரங்கபாதையுண்டு.அதன்வழியாக பாம்பாட்டி சித்தர் தரிசித்து வருவார்.சில நேரங்களில் சித்தர் சர்ப சொரூபத்தில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்.அவர் தவ வலிமையோடு உள்ளவர்கள் கண்களுக்குத்தான் தென்படுவார்.ஏராளமான தமிழ் திரைப்படங்களில் இக்கோயில் இடம் பெற்றுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment