Sunday, July 6, 2008
மோகனூர்
அருள்மிகு நாவலடி கருப்பண்ணசாமி திருக்கோயில்.மோகனூர் சுவாமி கருப்பண்ணசுவாமி பிறபெயர்.பட்டமரத்தான் பெருமை சுயம்பு அம்மன் செல்லாண்டியம்மன் விசேசம் சீட்டுஎழுதல் தலமரம் நாவல் மரம் சிறப்புமரம் வேம்புமரம் ஊர் மோகனூர் புராணபெயர்.மகனூர் மாவட்டம் பிரார்த்தனை கடன் பாக்கி ஆடுமாடு வியாபாரம் குடும்பத்தொல்லை தீராத வியாதி.கோர்ட் கேஸ் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கின்றது.கல்யாண பாக்கியம் குழந்தை பாக்கியம் ஆகிய பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறுகின்றது.நேர்த்தி கடன் ஆடு கோழிகளை பலி கொடுத்து விசேஷ பூஜைகள் நடத்தி வருகின்றனர்.சன்னதியில் நள்ளிரவு நேரத்தில் நடத்தும் சத்திய பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.கோயிலின் சிறப்பம்சம் சீட்டு எழுதிப் போடுதல்.சுவாமியோடு நேரடியாக கஷ்டங்கள் பற்றியும் அதனை தீர்த்து வைக்குமாறு பேசுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.கருப்பணசுவாமியின் பிறபெயர்கள்.நாவலடியான் ஜட்ஜ் துரை கூனன் தலபெருமைகள் 2000 வருடம் பழமையான கோயில் இது என்கிறார்கள்.நாவலடியான் என்கின்ற கருப்பண்ணசுவாமி சுயம்புவாக தோன்றியுள்ளது இங்கு சிறப்பு.சுயம்பு மூர்த்தி இங்கு குழிக்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சுயம்புவுக்கு பின்புறம் பட்டுப்போன பழங்கால நாவல் மரம் இன்னமும் உள்ளது செங்குட்டுவன் கள வேள்வி செய்த இடம் இத்தலம் இங்குள்ள செல்லாண்டியம்மன் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.இக்கோயிலில் நாள்தோறும் அசைவ பூஜைகள் மட்டுமே செய்யப்படுகின்றன.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் நாமக்கல் 20 கி.மீ. ராசிபுரம் 75கி.மீ.கரூர் 45 கி.மீ.ஈரோடு 75 கி.மீ.தங்கும் வசதி.கட்டணம் ரூ.200 முதல் ரூ.500 வரை.போக்குவரத்து வசதி நாமக்கல் நகரிலிருந்து மோகனூருக்கு நகர பேருந்து வசதி அடிக்கடி இருப்பதால் மோகனூர் கோயிலுக்கு செல்வது எளிது.அருகிலுள்ள ரயில் நிலையம் சேலம் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி முக்கிய திருவிழாக்கள் மாரியம்மன் திருவிழா 15 நாள் திருவிழா பங்குனி மாதம் லட்சக்கணக்கான அதிகமான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.காளியம்மன் திருவிழா 8 நாள் சித்திரை மாதம் அன்று ஆயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.தல வரலாறு சிவசக்தி வடிவமாகிய இறைவனே காவல் தெய்வமாகிய கருப்பண்ணசுவாமியாக இங்கு உள்ளான்.இந்த பழையன் சுயம்புக்கு தெற்கே உள்ள வேம்புமரத்தை காவல் மரமாக அறிவித்து தரிசித்து வந்தான்.இந்த நாவல் மரம் செங்குட்டுவ மன்னன் படையெடுப்புக்குப்பின் பட்டுப்போய் அதன் சுவடு மட்டும் தற்போது உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment