Tuesday, July 8, 2008

மல்டநூவா

மல்டநூவாக் குடியரசு Republica Moldova கிழக்கு ஐரோப்பாவில் மற்ற நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும்.இதன் மேற்கே ருமேனியாவுக்கும் வடக்கு கிழக்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் உக்ரேனுக்கும் இடையில் அமைந்துள்ளது.1812இல் இது ரஷ்யப் பேரரசுடன் இணைக்கப்பட்டு ரஷ்யாவின் வீழ்ச்சியின் பின்னர் 1918இல் ருமேனியாவுடன் இணைக்கப்பட்டது.பனிப்போர் முடிவில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது ஆகஸ்ட் 27 1991 இல் இந்நாடு முழுமையாக விடுதலை பெற்றது.மல்டநூவா ஒரு நாடாளுமன்ற சனநாயக நாடாகும்.நாட்டின் த்லைவராக சனாதிபதியும் அரசுத் தலைவராக தலைமை அமைச்சரும் உள்ளனர்.விடுதலை பெற்ற நாளிலிருந்து மல்டநூவா ஒரு நடுநிலை நாடாக விளங்கி வந்திருக்கிறது.

No comments: