Tuesday, July 8, 2008

மியான்மார்

மியான்மார்.இன்றைய இரும்புத் திரை நாடு.1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மார் நைங்கண்டாவ் அல்லது Union of Myanmar என்று மாற்றினர்.தலைநகர் ரங்கூன் யாங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.12 000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர்.ஆனால் அரசாட்சி கி.மு முதல் நூற்றாண்டில் தான் தொடங்கியது என நம்பப்படுகிறது.சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர்.நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன.அரசு மொழி பர்மீஸ்.பல்லாயிரக்கணக்கான புத்த கோயில்கள் நாடு முழுவதும் பரவியிருப்பதால் Land of Pagodas என்றும் வழங்கப்படுகிறது.யாங்கோனில் உள்ள தங்கத்தால் வேயப்பட்ட ஷ்வே டகோன் பகோடா மிகவும் புகழ் பெற்றது.மாண்டலேயில் உள்ள குத்தோடாவ் பகோடாவில் உலகின் மிகப் பெரியப் புத்தகம் 729 பளிங்குப் பலகைகளால் ஆனது உள்ளது.பெருந்தொழில்கள் எல்லாம் அரசின் கையில்.விவசாயம் சிறுதொழில்கள் போக்குவரத்து போன்றவை தனியார் வசம்.தொழிலாளிகளில் 67.4% பேர் விவசாயத்தில்.ஐராவதி நதி படுகையில் உலகின் வளமான நெல் விளை நிலங்கள் உள்ளன.நவரத்தின வளங்கள் நிறைந்த நாடு.தமிழர்கள் முன்பு அதிக அளவில் வாழ்ந்தனர்.

No comments: