Monday, July 7, 2008

நாகப்பட்டினம் மாவட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம்.நாகப்பட்டினம் மிக முக்கியமான துறைமுகங்களுள் ஒன்று.இங்கு நாகராஜன் கோயில் உள்ளது.வேளாங்கன்னிக்கும்.நாகூர்க்கும் இடையில் இது உள்ளது.நாகூர்.தஞ்சாவூரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் உள்ள இங்கு முஸ்லீம்களின் புனித தலமான நாகூர் தர்கா உள்ளது.இங்கு ஒவ்வொரு வருடமும் கந்தூரி திருவிழா நடைபெறும்.அனைத்து மதத்தினரும் இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.Velankanni.இங்குள்ள தேவாலயம் கிறிஸ்தவர்களின் புனித தலம்.இங்கு Our Lady of Health என்ற தேவாலயம் உள்ளது.Kodikarai.பாக் ஜலசந்தியில் அமைந்துள்ளது.இங்கு பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் சரணாலயம் இந்த இடத்தில் அமைந்துள்ளது.வேதாரண்யம்.அகத்திய முனிவரின் தவத்தை மெச்சி சிவபெருமான் பார்வதியுடன் எழுந்தருளிய திருத்தலம்.காந்திஜி சுதந்திரப் போராட்டத்தில் உப்பு சத்யாகிரகம் செய்த இடம் இது.ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதங்களான ஆடி தை மாதங்களில் வரும் பௌர்ணமி அன்று விழா கொண்டாடப்படும்.திருவாரூர்.தியாகராஜ சுவாமி ஆலயம் இங்கு உள்ளது.நீதி காக்க தம் சொந்த மகனையே தேர்காலில் இட்டுக் கொன்ற மனுநீதி சோழன் வாழ்ந்த ஊர்.இங்கு உள்ள தேர் மிகவும் பிரபலமானது ஒவ்வொரு வருடமும் இங்கு தேர்திருவிழா நடைபெறும்.தியாகராஜ சுவாமிகளின் பிறந்த ஊர் இது.சீர்காழி.ஷ்ரீ பிரம்ம புரீஸ்வர் சட்டநாதர் தோணியப்பர் ஆலயமும் திருநிலைநாயகி ஆலயமும் ஞானசம்மந்தர் ஆலயமும்.இங்கு ஒரே கோயிலில் உள்ளது வைதீஸ்வரன் கோயில்.வைதீஸ்வரன் கோயில்.வைத்யநாதஸ்வாமி திருக்கோயிலில் தையல் நாயகியுடன் எழுந்தருளியுள்ளது.இங்குள்ள குளத்தூரில் நீராடி வைத்யநாதனை வழிபட்டால் எல்லா நோய்களும் தீரும்.பூம்புகார்.சோழர்களின் துறைமுகமாக விளங்கியது பூம்புகார்.உலக புகழ்பெற்ற சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது இங்குதான்.கோவலன் கண்ணகி சரித்திரமும் கொற்கை பாண்டியனின் நெடுங்கால் மண்டபம் வழக்காடு மன்றம் ஆகிய இங்கு பிரசித்தமானது.நகரின் பாதி கடலில் மூழ்கி தற்போது மிகச்சிறிய கிராமமாக காட்சி அளிக்கிறது.சித்திர பௌர்ணமி விழாவும் இசை விழா ராஜ ராஜசோழனின் பிறந்தவிழா வேளாங்கன்னி திருவிழா ஆகியவை இங்கு கொண்டாடப்படும் முக்கிய விழாக்களாகும்.

No comments: