இத்தலம் இன்றைய.ஸ்ரீரங்கம் ரயில்வே நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீட்டருக்குக் குறைவான தூரத்திலும் திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்திலும் உள்ளது இத்தலம்.வரலாறு இத்தலம் பற்றி எண்ணற்ற புராணங்களும் வடமொழி நூற்களும் பண்டைத் தமிழ் இலக்கியங்களும் விவரங்களை அள்ளி வழங்கியுள்ளது. இப்பெருமாள் இட்சுவாகுவால் கொணரப்பட்டதால் இப்பெருமாள் இட்சுவாகு குலதனம் என்றே அழைக்கப்பட்டார்.தல சிறப்புகள் இத்தலம் பற்றிய சிறப்புகள் ஏராளமாக சொல்லப்பட்டிருந்தாலும் அவற்றுள் சிலவற்றை இங்கே சொல்லலாம்.திருமகள் தினமும் வந்து பூஜித்துச் செல்லும் சிறப்பைப் பெற்றது இத்தலம் என்றால் அது மிகையல்ல.
 
No comments:
Post a Comment