Monday, July 7, 2008
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம்.ஏற்காடு ஏரி.இங்கு வரும் பயணிகளை கவர்வது இங்குள்ள ஏரி அதனை சூழ்ந்துள்ள இயற்கை வளம் குளத்தில் படகு சவாரி இவையெல்லாம் இங்குள்ள சிறப்பு.அண்ணா பார்க் ஏரியை சுற்றி அமைந்துள்ள அழகான இயற்கை சூழல்.Lady s Seat.இங்கிருந்து சேலம் மாவட்டம் முழுவதையும் கண்டுகளிக்கக் கூடிய இடத்திற்கு Lady s Seat என்று பெயர்.இரவில் இங்கிருந்து சேலம் மாவட்டத்தை முழுவதும் காண்பது ஒரு அரிதான காட்சி.சேர்வராயன் கோவில்.குன்றின் மேல் அமைந்துள்ள கோவில் இது மிக பெரிய சிகரங்களில் ஒன்றாகும்.இங்குள்ள ஆதிவாசிகள் மே மாதத்தில் கொண்டாடும் வருட பண்டிகை மிக சிறப்பானது.இந்த குன்றிற்க்கு செல்ல பஸ் போக்குவரத்து இல்லை எனினும் பயணிகள் தங்களது சொந்த போக்குவரத்து மூலம் தான் செல்ல முடியும்.கரடி குகை.ஏற்காட்டில் உள்ள மிகப் பழமையான Norton Bunglow இல் உள்ளது இது.Pogada Point Green House Silk Farm Horticulture Research Station Cauvery Peak ஆகியவையும் இயற்கை கண்காட்சியும் இங்குள்ள சிறப்பு இடங்களாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment