Sunday, July 6, 2008

சமயபுரம்

அருள் மிகு ஆதிமாரியம்மன் கோயில்.சமயபுரம் மூலவர் ஆதிமாரியம்மன் உற்சவர் சமயபுரம் மாரியம்மன் தல விருட்சம் வேப்ப மரம் சிறப்பு மாரியம்மன்களில் முதன்மையானதாக கருதப்படுபவர் ஊர் சமயபுரம் மாவட்டம் திருச்சி.சமயபுரத்திலிருந்து செல்லும்போது ஒரு கால்வாய் குறுக்கிட்டது.அம்பாளை கரையில் வைத்துவிட்டு கால்வாய்க்குள் இறங்கி வீரர்கள் கை கால் கழுவினர்.திரும்பிவந்து பார்த்தபோது அங்கு சிலை இல்லை.எங்கெங்கோ தேடிப்பார்த்து சோர்ந்து சென்றுவிட்டனர்.இதன்பிறகு அப்பகுதிக்கு விளையாடச் சென்ற குழந்தைகள் அந்த சிலையை கண்டனர்.சிலைக்கு பூஜை செய்து விளையாடினர்.இந்த தகவல் ஊர்மக்களுக்கு தெரியவந்தது.அங்கிருந்து கோயிலுக்கு எடுத்து வருவதற்காக முயன்றபோது ஒரு பெண்ணுக்கு அருள்வந்து.சிலையை மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறினார்.மக்கள் பூ கட்டி பார்த்தனர்.அதிலும் சமயபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றே தெரிந்தது.எனவே ஒரு யானையை வரவழைத்து அந்த யானை எங்கு போய் நிற்கிறதோ அங்கு கொண்டு செல்வோம் என முடிவு செய்யப்பட்டது.யானையும் சிறிது துணரம் நடந்துசென்று ஒரு இடத்தில் படுத்துவிட்டது.அந்த இடத்தில் சிலையை வைத்து பூஜை செய்தனர்.இவளே ஆதிமாரியம்மன் எனப்பட்டாள்.சமயபுரத்தில் இருக்கும் அம்மன் இவளது மகளாக கருதப்படுகிறாள்.இப்போதும் சமயபுரத்திலிருந்து திருவிழா காலத்தில் இங்கு மாரியம்மன் தன் தாயைக் காண வருவதாக ஐதீகம்.இதற்காக பல்லக்கில் அம்பாள் கொண்டுவரப்படுகிறாள்.அப்போது ஊர்மக்கள் சமயபுரத்தாளுக்கு சீர் கொடுக்கின்றனர்.தாய்வீட்டு சீதனமாக இதைக் கருதுகின்றனர்.வசதி இல்லாதவர்கள் கூட 50 ரூபாயாவது மணியார்டர் செய்துவிடுகின்றனர்.சிலரை வீட்டிற்கே வரவழைத்து சீர் கொடுக்கின்றனர்.இந்த சன்னதி தெற்கு நோக்கி உள்ளது.சமயபுரத்து அம்மனைப்பார்த்த நிலையில் தாய் இருப்பதால் இவ்வாறு திசை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.விழாக்காலத்தில் சமயபுரத்தம்மன் இங்கு வரும்போது மகிழ்ச்சியாக இருப்பது போலவும் திரும்பிச்செல்லும்போது சோகமாக இருப்பது போலவும் சிலையின் வடிவமைப்பு மாறிவிடுவதாக கிராமமக்கள் கூறுகிறார்கள்.தாயைப்பிரிந்து செல்வதால் மகளுக்கு இவ்வாறு முகத்தில் சோகம் கவ்விக்கொள்வதாக நம்பிக்கை. இக்கோயிலில் விநாயகர் முருகன் நாககன்னி சன்னதியும் உள்ளது.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் திருச்சி சமயபுரம் மாரிய்மமன் கோயிலிலிருந்து ஒரு கி.மீ. ஆட்டோ க்கள் கார்களில் செல்லலாம் தங்கும் வசதி குடும்பத்டன் வரும் பக்தர்கள் அருகிலுள்ள திருச்சி லாட்ஜ்களில் தங்கி இங்கு வந்து தரிசிக்கலாம்.கட்டணம் ரூ.250முதல் 2000 வரை அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சி அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி முக்கிய திருவிழாக்கள் தை கடைசி ஞாயிறும்.மாசியில் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமையும் அம்மன் உலா உண்டு.மூன்றாம் ஞாயிறு அன்று தேரோட்டம் நடக்கிறது.இங்கு விழா முடிந்தபிறகுதான் சமயபுரத்தில் விழா துவங்குகிறது.கார்த்திகை சோமவாரம் சித்ரா பவுர்ணமி நவராத்திரி விழா ஆகியவை முக்கியமானது.

No comments: