Tuesday, July 8, 2008

தென் அமெரிக்கா

தென் அமெரிக்கா அமைந்த இடம்.தென் அமெரிக்கா நில அமைப்புதென் அமெரிக்கா ஒரு கண்டம்.இக்கண்டத்தின் மேற்கில் பசிபிக் மாக்கடலும் தெற்கில் அன்டார்ட்டிகா பனிகண்டமும் கிழக்கில் அத்லாந்திக் மாக்கடலும் வடக்கில் வட அமெரிக்கக் கண்டமும் உள்ளன.இது உலகின் தென்பாதி உருண்டைப் பகுதியில் அமைந்த கண்டமாகும்.ஆஸ்திரேலியாவும் அன்டார்டிகா பனிக்கண்டமும்.தென் அமெரிக்கா 17.8 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்டது.தென் வடலாக தெற்கு வடக்காக சுமார் 7 600 கி.மீ தொலைவும் கிழக்கு மேற்காக கீழ் மேலாக ஏறத்தாழ 5 300 கி.மீ. அகலமும் உடையது இக்கண்டம்.மேற்குலகிலேயே யாவற்றினும் மிக மிக உயரமான அக்கோன்காகுவா மெருமலை இக்கண்டத்தின் அர்ஜென்டினா நாட்டில் உள்ளது.இமய மலைக்கு அடுத்தாற்போல் மிக உயர்ந்த இம்மலை 6 960 மீ. உயரம் உடையது.இக்கண்டத்தில் உள்ள 12 தனிநாடுகளில் சுமார் 300 மில்லியன் மக்கள் வசிகிறார்கள் 1991ன் கணக்குப் படி.இக் கண்டத்திலே மிகப்பெரும்பாலோர் இலத்தீன் மொழிவழி தோன்றிய ஸ்பானிய மொழி பேசுவதால்.இத் தென் அமெரிக்காவை.இலத்தீனிய அமெரிக்கா என்றும் அழைக்கப்படுகின்றது.பிரேசில் நாட்டில் போர்ச்சுகீசிய மொழி பேசப்படுகிறது.நாடுகள்.தென் அமெரிக்காவில் உள்ள நாடுகள்.பிரேசில்.கயானா.சுரினாம்.பிரென்ச்சு கயானா.பராகுவே.உருகுவே.அர்ஜென்டினா.பெரு.சிலி.ஈக்குடநூர்.வெனிசூலா.கொலம்பியா.

No comments: