Tuesday, July 8, 2008

ஸ்பெயின்

ஸ்பெயின் என்றழைக்கப்படும் ஸ்பெயின் இராச்சியம் ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது.இதன் தலைநகரம் மாட்ரிட் ஆகும்.ஸ்பானிய மொழி இங்கு பேசப்பட்டு வருகிறது.இது உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாகும்.யூரோ இந்நாட்டின் நாணயம் ஆகும்.பார்சிலோனா இங்குள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.வரலாறு.இபேரியா தீபகற்பத்தின் பல்வேறு பழங்குடியினரும் இபேரியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.கிமு 8ம் நூற்றாண்டுக்குப் பிறகு செல்டிக் பழங்குடியினரும் பின் ஃபினீஷியர்களும்.ரோமானியர்கள் கிமு 2 ம் நூற்றாண்டில் இபேரியன் தீபகற்பத்திற்கு வந்தனர்.இரண்டு நூற்றாண்டு காலம் செல்டிக் மற்றும் இபேரிய பழங்குடியினரிடம் போரிட்டு கடற்கரை வியாபார மையங்களை இணைத்து ஹிஸ்பானியா வை உருவாக்கினர்.ரோமானிய பேரரசிற்கு ஹிஸ்பானியா உணவு ஆலிவ் எண்ணை ஒயின் மற்றும் உலோகங்களை அளித்து வந்தது.ஸ்பெயின் நாட்டின் தற்பொதைய மொழிகள் மதம் சட்ட அமைப்பு போன்றவை ரோமானிய ஆட்சிக்காலத்திலிருந்து உருவானவை.

No comments: