Saturday, July 5, 2008

திருக்கரம்பனூர்

திருக்கரம்பனூர் என்னும் உத்தமர் கோயில்.கேடிஸ்ரீ 108 வைணவ திவ்ய தலங்களில் மூன்றாவதாக வருவது திருக்கரம்பனூர் என்னும் உத்தமர் கோயிலாகும்.இத்தலத்தைப் பற்றி இந்த வாரம் காண்போம்.திருச்சியிலிருந்து வடக்கே நான்கு மைல் தொலைவில் கொள்ளிட நதிக்கரையில் உள்ளது உத்தமர் கோயில் என்னும் இத்தலம்.ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு மைல் தூரமும் திருச்சியிலிருந்து துறையூர் மணச்ச நல்லூர் செல்லும் பேருந்துகளின் மூலம் இத்திருத்தலத்தை அடையலாம்.தலவரலாறு இத்தலத்தைப் பற்றிய விவரங்கள் பிரம்மாண்ட புராணத்தில் அதிகளவில் கூறப்பட்டுள்ளது.பிரம்மன் ஆகமத்தில் கூறப்பட்ட விதிகளுக்குட்பட்டு சந்தியா காலத்தில் திருமாலை ஆராதித்து வந்தார்.பிரம்மனின் பக்தியை சோதிக்க நினைத்த திருமால் இத்தலத்தில் ஒரு கதம்ப மரமாக உருக்கொண்டு நின்றார்.இதை உணர்ந்த பிரம்மனம் இவ்விடத்திற்கு வந்து தம் கமண்டல நீரால் கதம்ப மரத்திற்கு அபிஷேகம் செய்து திருமாலை துதித்தான்.அபிஷேகத்தில் குளிர்ந்த திருமால் பிரம்மனுக்கு காட்சி அளிக்கிறார்.பிறகு பிரம்மனிடம் இதுபோலவே எந்நாளும் என்னைத் துதித்து.இவ்விடத்தே வழிபட வேண்டும் என்று கூறி மறைந்தார்.இதனை அடுத்து பிரம்மனும் இங்கு கோவில் கொண்டான் என்பது வரலாறு.இதற்கிடையில் பிரம்மனின் கபாலம் கையில் ஒட்டிக் கொள்ள அத்துடன் தீர்த்த யாத்திரை செய்த சிவன் இங்கு வந்து சேர்ந்ததும் இதுவரை நிறையாத கபாலம் நிரம்பியது.ஆதலால் பிராட்டிக்கும் பூரணவல்லி தாயார் என்னும் பெயர் ஏற்பட்டது.தனது பிச்சை பாத்திரம் நிறைந்த காரணத்தால் சிவபெருமானும் இங்கு பிட்சாடன் மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார் என்பது சிறப்பு.உத்தமர் கோவில் திருமால் கதம்ப மரமாக உருவெடுத்து நின்றமையால் கதம்பனூர் என்றே.இத்தலம் அழைக்கப்பட்டு பின்னாளில் கரம்பனூர் ஆக மாறியது.திருமங்கையாழ்வாரால் உத்தமன்.இப்பொருள் அழைக்கப்பட்டதால் உத்தமர் கோவிலாயிற்று.பன்னிரண்டு ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரும் ஆண்டாளுமே பெருமாளை உத்தமன் என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகின்றனர் என்பது சிறப்பு.ஓங்கி உலகளந்த உத்தமன் என்கிறார் ஆண்டாள் திருப்பாவையில்.மூலவர் இத்திருக்கோவிலில் மூலவர் புருஷோத்தமன் என்ற பெயர் கொண்டு விளங்குகிறார்.புஜங்கசயனம் கிழக்கே திருமுக மண்டலமாக காட்சியளிக்கிறார்.தாயார் பூர்ணவல்லி பூர்வாதேவி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.இத்திருக்கோவிலின் தீர்த்தம் கதம்ப தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.அதுபோல் வாழை மரம் இத்திருக்கோவிலின் ஸ்தல விருட்சமாக உள்ளது.கோயில் சிறப்புக்கள் மூம்மூர்த்திகளும் இக்கோவிலுக்குள் எழுந்தருளியுள்ளது குறிப்பிடத்தக்கது.மூம்மூர்த்திகளும் ஒரே கோவிலுக்குள் எழுந்தளியுள்ள காட்சி வேறெங்கும் காணாதது. இதன் பொருட்டு இத்தலம் த்ரிமூர்த்தி தலம் என்றும் அழைக்கப்படுகிறது.பிச்சையெடுத்து வந்த நிலையில தனது பாத்திரம் நிறைந்ததால் பிட்சாடன மூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளதால் இக்கோவிலுக்கு பிட்சாண்டார் கோயில் என்ற ஒருபெயரும் உண்டு.ஒருமுறை ஜனகர் இங்குள்ள கதம்ப தீர்த்தக்கரையில் யாகம் ஒன்றினை நடத்தினார்.யாகத்தில் அவியுணவுகளை நாய் ஒன்று தின்று மாசுபடுத்திவிட்டது. இதனால் ஏற்பட்ட தோஷத்தை போக்க கதம்ப மரத்தை பூசிக்கும்மாறு ஜனகனிடம் முனிவர்கள் கூறினார்கள்.அருகில் பிட்சாண்ட மூர்த்தியான சிவனுடனும் திருமால் ஜனகனுக்கு காட்சி கொடுத்த சிறப்பைப் பெற்றது இத்தலம்.இவ்வாறு பக்தன் ஒருவனுக்கு மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்த தலம் இது ஒன்றுதான்.மும்மூர்த்திகளையும் ஒருங்கே கண்ட ஜனகர்தான் அந்த பக்தர்.இத்தலத்தில் மூம்மூர்த்திகளுக்கும் கோயில் கட்டினார் என்ற வரலாறும் உண்டு.ஸ்ரீரங்கத்தில் குடிக்கொண்டிருக்கும் ரங்கநாதர் ஆண்டுதோறும். இத்திருத்தலத்திற்கு எழுந்தருளி கதம்ப தீர்த்தத்தில் நீராடி செல்வது இன்றும் வழக்கமான ஒன்றாகும்.அதுபோல் திருமங்கையாழ்வார் இவ்வூரில் தங்கிக் கொண்டுதான் ஸ்ரீரங்கத்தின் கோவில் மதில் மண்டபம் போன்றவற்றிற்கான திருப்பணிகளை செய்தார் என்று சொல்லப்படுகிறது.அதே போல் கதம்ப தீர்த்தத்தின் வடக்கேயுள்ள தோப்பும் நஞ்செய்யும் எழிலார்ந்த சோலையும் திருமங்கை மன்னன் தங்கியிருந்ததின் காரணமாகவே ஆழ்வார் பட்டவர்த்தி என்று இன்றும் அழைக்கப்படுவது குறிப்படத்தக்கது.கரம்பனூரில் கோயில் கொண்டுள்ள உத்தமனை தென்னரங்கத்தில் கண்டேன் என்றார் திருமங்கையாழ்வார்.இதற்கு விளக்கமளித்த பெரியவாச்சான் பிள்ளை வழிக்கரையிலே திருவாசலுக்கு ஒரு கதவிடாதே வந்துகிடக்கிறவனை.எல்லோரும் நடந்து செல்லக்கூடிய வழியாக இருப்பதனால் வணங்குவோர் எந்நேரமும் வரலாம் போகலாம் என்பதால் தனக்கு கதவி வைத்துக் கொள்ள அவகாசம் இல்லை என்று கதவிடாதே கிடந்துவிட்டான் என்பது மற்றும் ஒரு கருத்து.ஒரு காலத்தில் கதவு இல்லாமல் இருந்த இத்தலத்திற்கு இப்போது கதவு உண்டு.மேலும் இக்கோயிலின் மகாமண்டபத்தில் பிரமனுக்கு அமைக்கப்பட்ட கோயிலில் சரஸ்வதி எழுந்தருளியுள்ளது சிறப்பி.

No comments: