Monday, July 7, 2008

தேரழுந்தூர்

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்.தேரழுந்தூர் நாகப்பட்டினம் மாவட்டம் மூலவர் வேதபுரீஸ்வரர்.அம்மன் சவுந்தராம்பிகை தலமரம் வில்வம் சந்தனம் தீர்த்தம் வேத தீர்த்தம் பதிகம் திருஞான சம்பந்தர் வழிபட்டோ ர் அகத்தியர் சிறப்பு கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊர்.காலம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தை சேர்ந்தது.ஊர் தேரழுந்துணர்.மாவட்டம் நாகப்பட்டினம்.தல வரலாறு ஒருமுறை பரமேஸ்வரனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர்.ஒரு கட்டத்தில் பகடைக்காயில் விழுந்த எண்ணிக்கையில் சந்தேகம் வந்தது.நடுவராக இருந்த பார்வதி பெருமாளுக்கு ஆதரவாக சிவனை குறை கூறினார்.இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை பசுவாக மாற சாபமிட்டார்.எனவே இவ்வூரிலுள்ள பெருமாளின் பெயர்.ஆமருவியப்பன் என்றானது.சவுந்தர்ய நாயகி என இவளை அழைத்தனர்.தன் அழகை பிறர் விரும்ப வேண்டும் என விரும்புபவர்கள் இந்த அன்னையிடம் அதற்கான அருளாசி பெறலாம்.பார்வதியை பசுவாக சபித்த சிவன் வருத்தமடைந்து இங்கு வந்து வேதியர்களுக்கு வேதம் சொல்லித் தந்தார்.எனவே இங்குள்ள இறைவனின் திருநாமம் வேதபுரீஸ்வரர் என்பதாகும்.பெயர்க்காரணம் அகத்திய முனிவர் இத்தல இறைவனை பூஜை செய்து கொண்டிருந்தார்.அப்போது இதை அறியாத ஊர்த்துவரதன் என்னும் அரசன் வான் வௌதயில் தேரை செலுத்தினான்.அந்த தேர் செல்லாது அழுந்திய காரணத்தால் இத்தலம் தேரழுந்துணர் ஆனது.சிறப்பம்சம் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் இது 38வது தலம்.இத்தல இறைவனை வேதங்கள் தேவர்கள் அஷ்ட திக் பாலகர்கள் முனிவர்கள் பூஜை செய்துள்ளனர்.சிவனும் பெருமாளும் சொக்கட்டான் விளையாடிய மண்டபம் இன்னமும் உள்ளது.சிவனும் சக்தியும் பிரிந்த காலத்தில் அவர்களை சந்திக்க இந்திரன் முதலான தேவர்கள் இங்கு வந்தனர்.ஆனால் நந்தி அவர்களை சிவனை சந்திக்க அனுமதிக்கவில்லை.எனவே அஷ்டதிக் பாலகர்களும் இந்த ஊரைச்சுற்றி லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.அந்த அஷ்ட லிங்கங்கள் இன்றும் உள்ளன.காவிரிக்கும்.அகஸ்தியருக்கும் இங்கு சாபவிமோசனம் கிடைத்ததால் இருவருக்கும் தனித் தனி சன்னதி உள்ளது.அப்போது இத்தலத்தில் இருந்த பிள்ளையார்.அதோ ஈஸ்வரன் கோயில்.என சுட்டிக்காட்டினார்.எனவே இந்த பிள்ளையார்.ஞானசம்பந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார்.மாசி 23 24 25 தேதிகளில் மாலை 5.55 முதல் மாலை 6.05 வரை சூரிய பூஜை நடக்கிறது.இது மேற்கு பார்த்த சிவன் கோயில்.திருவிழா சித்ரா பவுர்ணமிக்கு பத்து நாள் முன்னதாக கொடியேற்றி தேர் திருவிழாவுடன் முடிகிறது.பூஜை நேரம் காலை 6 11.30 வரை மாலை 5 8.30 மணி வரை.இருப்பிடம் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 10 கி.மீ. துணரத்தில் உள்ளது தேரழுந்துணர்.அடிக்கடி பஸ் வசதி உள்ளது.போன் 04364 237 650.அருகிலுள்ள ரயில் நிலையம் குத்தாலம்அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.

No comments: