Monday, July 7, 2008
திருகாரகம்
அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில்.திருகாரகம் காஞ்சிபுரம் இது உலகளந்த பெருமாள் கோயிலினுள் அமைந்துள்ள திவ்ய தேசம் மூலவர் கருணாகரப்பெருமாள் உற்சவர் ஜெகதீசப்பெருமாள் திருமேனி வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம் தாயார்.பத்மாமணி நாச்சியார் விமானம் வாமன விமானம் ரம்ய விமானம் தீர்த்தம் அக்ராய தீர்த்தம் மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் தரிசனம் கண்டவர்கள் கண்டவர்கள் கார்ஹ மகரிஷி ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தல வரலாறு கார்ஹ மகரிஷி என்னும் முனிவர் இந்த பெருமாளை குறித்து தவம் இருந்து அளவற்ற ஞானம் பெற்றார்.அவர் பெயராலேயே இந்த திவ்ய தேசம் காரகம் எனப்பட்டது என்பர்.இந்த பெருமாளை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.திருங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்தக்கோயிலில் உள்ள திருநீரகம் திருக்கார்வனம் ஆகிய இந்த மூன்று தலங்களும் திருஊரகத்துடன் வந்து விட்டதா.அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.தல சிறப்பு பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருகாரகம் எனப்படும்.இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே உள்ள திவ்ய தேசம் ஆகும்.இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம் திருநீரகம் திருக்கார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது.அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது.இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது.பூஜை நேரம் காலை 7 முதல் 12 வரையிலும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசிக்கலாம்.இருப்பிடம் காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் கோயில் உள்ளது.மொபைல் 94435 97107 98943 88279அருகிலுள்ள ரயில் நிலையம் காஞ்சிபுரம்அருகிலுள்ள விமான நிலையம் சென்னை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment