Sunday, July 6, 2008
திருநள்ளார்
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்.திருநள்ளார் பிரதானம் சனீஸ்வரர் மூலவர் நள்ளாறர் பெருமை சுயம்பு அம்பாள் பூண்முலையாள் சிறப்பு சப்தவிடதலம் தலமரம் தர்ப்பை தீர்த்தம் நளதீர்த்தம் பதிகம் தேவாரம் ஊர் திருநள்ளார் மாநிலம் பிரார்த்தனை.துயர்கள் நீங்கவும் பாவங்கள் தொலையவும் பல தரப்பட்ட பிணிகள் நீங்கவும் எடுத்த காரியம் எளிதில் நிறைவேறவும் வாக்கு வன்மை பெறவும் இத்தலத்தில் பக்தர்கள் பெருமளவில் வழிபடுகின்றனர்.கல்யாணவரம் உள்ளிட்ட எந்த சுப காரியமானாலும் இத்தலத்து தர்ப்பாரண்யேசுவரரை நள்ளாறர் வணங்கினால் நன்மை கிடைக்கிறது.நேர்த்தி கடன் சனி தோசம் உள்ளவர்கள் அகல் விளக்கு வாங்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபடுகிறார்கள்.எள் விளக்கு ஏற்றி சுவாமியை வழிபாடு செய்கிறார்கள் எள் சாதம் சகஸ்ரநாம அர்ச்சனை அபிசேகம் நவகிரக சாந்த ஹோமம் ஆகியவற்றை செய்கிறார்கள் தவிர உண்டியல் காணிக்கை பசுமாடு தானம் தருதல் முடி காணிக்கை ஆகியவற்றையும் செய்கிறார்கள் மூலவர் தர்ப்பாரண்யேசுவரருக்கு வஸ்திரம் சாத்துதல் பால் பன்னீர் இளநீர் தயிர் நல்லெண்ணெய் சந்தனம் விபூதி அபிசேகப்பொடி ஆகியவற்றால் அபிசேகம் செய்தல் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள்.மேலும் போக மார்த்த பூண்முலை அம்மனுக்கு புடவை சாத்துதல் விளக்கு வைத்தல் ஆகியவற்யும் செய்கிறார்கள்.தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.கோயிலின் சிறப்பம்சம் சனிபகவான்.இவருடைய கோயில் கிழக்குப்பக்கத்தில் உட் கோபுரத்தின் வடபகுதியில் உள்ள சிறிய மாடத்தில் உள்ளது.இவர் நவகிரகங்களில் ஒருவர்.இவரால் இத்தலத்திற்கு சனீசுவர ஷேத்திரம் என்னும் சிறப்புப் பெயர் உண்டு.இவரது சந்நிதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தபடியே இருக்கும்.மகர கும்ப ராசிகளுக்குச் சனி பகவான் அதிபதியாதலின் சந்நிதி முன்னால் மகர கும்ப ராசிகளின் உருவங்கள் உள்ளன.சனிபகவானுக்கு தங்கத்தால் ஆன காக வாகனம் உள்ளது.நள்ளாறர் தர்ப்பாரண்யேசுவரர் மூலவரான நள்ளாறருக்கு தர்ப்பாரண்யேசுவரர் நள்ளாற்றீசர் என்றும் பெயர் உண்டு.இவர் சுயம்புத் திருமேனியார்.ஆதியில் தருப்பை வனத்தில் எழுந்தருளியிருந்ததால் தருப்பையிலான வடுக்கள் திருமேனியில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.இவர் மீது பாடப்பெற்ற திருப்பதிகமே பச்சைப் பதிகம்.தியாகப் பெருமான்.இவரது திருப்பெயர் நகவிடங்கத்தியாகர்.இவர் புரியும் திருநடனம் உன்மத்த நடனம்.முசுகுந்தச் சக்கரவர்த்தி தேவேந்திரனிடமிருந்து பெற்று வந்த மூர்த்திகளுள் ஒன்று.இவருக்கு உரிய அம்பிகை நீலோத் பலாம்பிகை. சொர்ண கணபதி இத்தலத்தில் உள்ள சொர்ண கணபதியை வணங்கினால் செல்வச் செழிப்பு உண்டாகும்.இத்தலத்தை ஆரம்ப காலத்தில் கட்டும்போது போதிய நிதி வசதி இல்லாமல் இருந்ததாம்.இந்த சொர்ண கணபதிக்கு கணபதிஹோமம் செய்த பின்னரே நிதி நிறைய சேர்ந்ததாக தகவல் உண்டு.தலபெருமைகள் மூலவர் தர்ப்பையில் தோன்றிய சுயம்பு மூர்த்தி என்பது விசேசம் சனி பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.மற்ற தலங்களில் மேற்கு பார்த்த முகமாக இருப்பார்.இங்கு மட்டுமே கிழக்கு பார்த்த முகமாக உள்ளார்.நள மகாராஜவுக்கு சனி தோஷம் நீங்கிய தலம் இது.தியாகேசப் பெருமான் வௌளி விமானத்தில் வீற்றிருந்தருள்கின்றார்.மரகதவிடங்கர் பெட்டகத்தில் எழுந்தருளியுள்ளார்.சாதிப்பச்சை இரத்தினத்தினாலான சிவலிங்கத்திருமேனி இது.சனி பகவானுக்கு இத்தலத்தில்தான் ஈஸ்வர பட்டம் சிவபெருமானால் தரப்பட்டது.திருஞான சம்பந்தரால் பச்சைப் பதிகம் பெற்ற தலம் இது.வட நாட்டு பக்தர்கள் பெருமளவில் வந்து போகும் சிறப்பு வாய்ந்த கோயில் இது.வௌத நாடுகளிலிருந்து கொண்டே பெருமளவில் பக்தர்கள் இத்தலத்தில் அர்ச்சனை செய்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் கும்பகோணம் 59 கி.மீ.பாண்டிச்சேரி 140 கி.மீதஞ்சை 100 கி.மீ.திருச்சி 150 கி.மீ.காரைக்கால் 5 கி.மீ. தங்கும் வசதி தேவஸ்தான விடுதிகள்.வி.ஐ.பி. சூட் ஏ.சி ரூ.300வி.ஐ.பி. சூட் 200காட்டேஜ்கள் 150இது தவிர லாக்கர் வசதியுடன் கூடிய டார்மெண்டரி ஹாலும் உண்டு.கட்டணம் ரூ.200 முதல் 500 வரை போக்குவரத்து வசதி பஸ்வசதி சென்னையிலிருந்து வருபவர்கள் பாண்டிச்சேரி காரைக்கால் மார்க்கமாக திருநள்ளார் வந்து சேரலாம்.தென்பகுதியிலிருந்து வருபவர்கள் கும்பகோணம் மார்க்கமாக திருநள்ளார் வந்து சேரலாம்.பாண்டிச்சேரி கும்பகோணம் நகர்களிலிருந்து அடிக்கடி திருநள்ளாறுக்கு பேருந்துப் போக்குவரத்து வசதி உள்ளது.அருகில் உள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறைஅருகில் உள்ள விமான நிலையம் சென்னை முக்கிய திருவிழாக்கள் சனிப்பெயர்ச்சி விழா இத்தலத்தின் மிகப் பிரம்மாண்டமான திருவிழா ஆகும்.சனிப்பெயர்ச்சி என்பது சனிபகவான் ஓர் ராசியிலிருந்து மற்றோர் ராசிக்குச் செல்லும் காலமாகும்.இதனால் அவரவர் ஜாதகப்படி நன்மைகளும் தீமைகளும் விளையக்கூடும்.எனவேதான்இங்கு சனிப்பெயர்ச்சி நாளன்று பக்தர்களின் கூட்டமும் பெருகி வருகின்றது.ஆயிரக்கணக்கான அர்ச்சனைகளும் அபிசேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.இதுவே இத்தலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம்.புரட்டாசி மாதத்துப் பௌர்ணமி நாளில் பலரும் இங்கு வந்து அன்னதானம் முதலியவற்றைச் செய்கின்றனர்.சுக்கிரவாரம் விநாயக சதுர்த்தி.நவராத்திரி மற்றும் புண்ணிய காலங்கள் ஆகியவற்றில் விழாக்களும் விசேச பூஜைகளும் நடைபெறுகின்றன.மாதத்தின் பிரதோச தினங்களில் கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவது சிறப்பு மேலும் வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான ஆங்கில தமிழ் புத்தாண்டு தினங்கள் கார்த்திகை தீபம் தீபாவளி பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் மூலவருக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.கட்டிய மனைவியுடன் கானகம் சென்றார்.அங்கு இருவரும் எண்ணற்ற துன்பங்களைக் கண்டனர்.மனைவி படும் துன்பத்தை காண சகிக்காது நளன் தமயந்தியை வனத்திலே விட்டுவிட்டு வௌதயேறினான்.பின்பு அயோத்தி அரண்மனையில் சமையற்காரனாக வேலை பார்த்தான்.அங்கு பற்பல துன்பங்களுக்கு பிறகு கணவனும் மனைவியும் இணைகின்றனர்.அங்கு நாரதமகரிஷி மூலம் தனக்கு சனிதோசம் இருப்பதை அறிந்து கொண்டான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment