Sunday, July 6, 2008
திருப்பரங்குன்றம்
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்.திருப்பரங்குன்றம் மூலவர் பரங்குன்றன் பெருமை முதல் படைவீடு சிவன் பரங்கிநாதர் பெருமாள் கனிவாய் அம்மன் துர்க்கை விநாயகர் கற்பக விநாயகர் தல விருட்சம் கல்லத்தி மரம்.தீர்த்தம் லக்குமி தீர்த்தம் பதிகம் தேவாரம் மாவட்டம் பிரார்த்தனை இத்தலத்தில் உள்ள முருகனை வேண்டிக்கொண்டால் தாமதமாகும் திருமண காரியங்கள் நடக்கின்றது.குழந்தைவரம் வியாபார விருத்தி.குடும்ப அமைதி கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கப் பெறுதல் ஆகியவை நிறைவேறுகின்றன.இத்தலத்தில் வழிபட்டால் பெற்றோரின் பாவங்கள் நம்மைத் தாக்க மாட்டாது நேர்த்தி கடன் முடி இறக்கி காது குத்தல் காவடி எடுத்தல் பால்க்குடம் எடுத்தல் சஷ்டி விரதம் இருத்தல் உடற்பிணி தீர ஆண்கள் அங்கபிரதட்சணம் பெண்கள் கும்பிடுதண்டமும் அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர்.தவிர சண்முகார்ச்சனை சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள்.கார்த்திகை விரதம் இருத்தல் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்கு செய்யலாம்.கோயிலின் சிறப்பம்சம் முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் முதல்படை வீடு என்ற பெருமை படைத்தது.முருகன் தெய்வானை திருமணம் நடந்த அற்புத தலம்.மூலஸ்தானத்தில் முருகப்பெருமான் தெய்வயானையைத் திருமணஞ்செய்து மணக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார்.பரங்குன்றன் என்றழைக்கப்படும் மூலவரே சுப்ரமணியர் என்றழைக்கப்படுகிறார் இத்தலம் மிக அழகிய குடவரைக் கோயில்.கி.மு. 2 ம் நூற்றாண்டு என்பது சிறப்பு ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகப்பெருமான் அமர்ந்து காட்சி தருகிறார்.மூலவருக்கு அபிஷேகம் கிடையாது.புனுகு மட்டுமே பூசப்படுகி றது.2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சிறப்பு றெற புராணத்தலம்.தென்மேற்கே 8 கி.மீ.தங்கும் வசதி குடும்பத்தோடு வரும் பக்தர்கள் தேவஸ்தானம் சார்பாக நடத்தப்படும் விடுதிலேயே தங்கிக் கொள்ளலாம்.தேவஸ்தான விடுதிகள்.பெரிய ரத வீதி தேவஸ்தான விடுதி.தவிர திருப்பரங்குன்றம் மற்றும் அருகில் உள்ள மதுரை நகரிலும் தனியார் விடுதிகள் நிறைய உள்ளன.போக்குவரத்து வசதி மதுரையிலிருந்து திருப்பரங்குன்றத்துக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளதுஅருகில் உள்ள ரயில் நிலையம் மதுரை ஜங்ஷன்.அருகில் உள்ள விமான நிலையம் மதுரை ஏர்ப்போர்ட்.முக்கிய திருவிழாக்கள் பங்குனி பெருந்திருவிழா மார்ச்.சித்திரைத் திருவிழா ஏப்ரல்.திருக்கார்த்திகை நவம்பர்.வைகாசி விசாகம் ஜூன்கந்த சஷ்டி திருவிழா.இத்தலம் இடம்பெற்ற பதிகங்கள் திருஞானசம்பந்தர் சுந்தர் தேவாரம்அருணகிரி நாதர் திருப்புகழ் நக்கீரர் திருமுருகாற்றுப்படை கந்த புராணம் மற்றும் பரிபாடல் கலித்தொகை மதுரைக்காஞ்சி போன்ற பாடல்களில் இத்தலம் பாடப்பெற்றுள்ளது.தல வரலாறு.அவனும் நாரதர் நான்முகன் மற்றும் தேவர்களும் வேண்டிக் கொள்கின்றனர்.இதையடுத்து முருகன் தெய்வயானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் சீரும் சிறப்புமாக நடந்தது.அதனால் தான் இன்றும் திருப்பரங்குன்றத்தில் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன.ஹை லைட்ஸ்.தரையில் இருந்த பகுதி பறவையாகவும் நீரில் விழுந்த பகுதி மீனாகவும் மாறி ஒன்றையொன்று இழுக்க அதைப் பார்த்த நக்கீரரின் தியானம் கலைந்தது.நக்கீரர் முருகனைத் துதித்துத் திருமுருகாற்றுப்படை பாட முருகன் பூதத்தை கொன்று நக்கீரரை விடுவித்தார் இத்தலத்தில் சிவபெருமான் மலையே சிவனாக இருப்பதால்தான் முருகப்பெருமான் சன்னதியில் மிகப்பெரிய நந்த மலையைப் பார்த்தபடி உள்ளது.இதை பலர் கவனித்திருந்தாலும் இதன் பின்னணியை அறிந்திருக்க வாய்ப்பில்லை.குடவரைக்கோயில் மிக அழகிய குடவரைக்கோயில் இது.மொத்தம் 5 குடவரைகள் உள்ளன.அவற்றில் 1.சுப்ரமணியர் தெய்வானை மற்றும் நாரதர் 2.துர்க்கை 3. விநாயகர் 4.சோமாஸ்கந்தர் சத்யகிரீஸ்வரர் 5.விஷ்ணு சீதேவி பூதேவி மற்றும் மாதங்க முனிவர் ஆகியோர் வீற்றிருப்பது அதி அற்புதமாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment