Monday, July 7, 2008

திருத்தணி

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணி 1.மூலவர் சுப்ரமணியர் 2. சிறப்பு வஜ்ராயுதம் 3.பெருமை 5ம் படைவீடு 4.தனிசந்நிதி.வள்ளி 5.தனிசந்நிதி.தெய்வானை 6.விநாயகர் ஆபத்சகாயர் 7.தல விருட்சம் மகுடமரம் 8.தீர்த்தம் இந்திரதீர்த்தம் 9.பதிகம் திருப்புகழ் 10.மாவட்டம் பிரார்த்தனை இத்தலத்து முருகப்பெருமான் மிகவும் அருள் வாய்ந்தவர் என்பதால் தினந்தோறும் பக்தர்கள் திருமண வரம் குழந்தை வரம் குடும்ப ஐஸ்வர்யம் தீர்க்க ஆயுள் ஆகியன வேண்டி வந்த வண்ணம் இருக்கிறார்கள்.எத்தனை கோபம் மொட்டை போடுதல் எடைக்கு எடை நாணயம் வழங்கல் பொங்கல் படைத்தல் சுவாமிக்கு சந்தனகாப்பு பஞ்சாமிர்த அபிசேகம் பால் அபிசேகம் அன்னதானம் வழங்குவது நெய் விளக்கு ஏற்றுதல் பால்குடம் எடுத்தல் காவடிஎடுத்தல் அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.கோயிலின் சிறப்பம்சம் ஸ்ரீ பாத சந்தனம்இத்தலத்தில் இந்த ஸ்ரீபாத சந்தனம் என்பதுதான் மிகவும் விசேசம்.இதுதான் இத்தலத்து பிரசாதம் என்பது குறிப்பிடத்தக்கது.முருகப்பெருமானுக்கு அபிசேகம் செய்த சந்தனம் இது.இதை நெற்றியில் வைத்துக்கொள்வதில்லை.மாறாக பக்தர்கள் வாயில் போட்டு விழுங்குவது வழக்கமாக உள்ளது.தீராத வியாதி.மன நோய்கள் ஆகியவை குணமாகின்றன.இந்த சந்தனம் வௌதயில் வாங்கப்படுவதில்லை.கோயிலுக்குள்ளே அரைக்கப் படுகிறது.இதை அரைப்பதற்கு என்று தனியாக கல் உள்ளது.அந்த கல்லில் நெடுங்காலமாக அரைத்தும் கூட கல் தேய வில்லையாம்.கட்டைதான் தேய்கிறதாம்.பிற தீர்த்தங்கள் இந்திர தீர்த்தம் தவிர சரவணப்பொய்கை சரஸ்வதி தீர்த்தம் மடசெட்டிக்குளம் நல்லாங்குளம் தலபெருமைகள் முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 5வது வீடு திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம் அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் துவாரம் இன்னமும் இருக்கிறதாம்.சுவாமி சாந்த சொரூபம் தெய்வேந்திரன் யானையை ஐராவதம் தெய்வானைக்கு கல்யாணப் பரிசாக தந்த தலம் இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது.வள்ளி மலையிலிருந்து வள்ளியை சிறையெடுத்து வந்து திருமணம் செய்து கொண்ட தலம்.365 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள அழகிய முருக தலம்.1 லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உற்சவர் சந்நிதியாக உள்ளது.எத்தலத்திலும் காணமுடியாத வழக்கமாக இத்தலத்து ஆபத்சகாய விநாயகரை கடைசியாகத்தான் வணங்குதல் வேண்டுமாம்.இத்தலத்தில் வேறெங்கும் காணமுடியாத விஷ்ணு துர்க்கை ஆலயம் உள்ளது மிகவும் பழமையான முருகன் திருத்தலம் இது.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் சென்னையிலிருந்து 87 கி.மீ.திருவள்ளூர் 42 கி.மீ.காஞ்சிபுரம் 42 கி.மீ.தங்கும் வசதி குடும்பத்தோடு வரும் பக்தர்கள் தங்கிக் கொள்ள தேவஸ்தானம் சார்பாக குடில்கள் உள்ளன.தணிகை இல்ல குடில்கள் தணிகை இல்லம்தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி இணை ஆணையர். செயல் அலுவலர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்.திருத்தணி 631 501போன் 954118 285225 285303 285387 தங்கும் விடுதி.285303 பேக்ஸ் 285243 மலைக்கோயில் முக்கிய திருவிழாக்கள் மாசிப் பெருந்திருவிழா வள்ளி கல்யாணம் 10 நாட்கள் திருவிழா.இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருள் பெறுவர்.சித்திரைப் பெருந்திருவிழா தெய்வானை உற்சவம் 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர்.ஆடிக் கிருத்திகை 10 லட்சம் காவடிகள் எடுத்து வருவது மிகப் பிரம்மாண்டமாக தெரியும்.அசுவினி பரணி கார்த்திகை நட்சத்திரத்தன்று கர்நாடகா ஆந்திரா.இவை தவிர கிருத்திகை அன்றும் தமிழ்.பாடல் பாடியோர் அருணகிரி நாதர் திருப்புகழிலும் நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் நிறைய பாடியுள்ளார்.இது தவிர ராமலிங்க அடிகளாரும் இத்தலத்து முருகனை குறித்து பாடியுள்ளார்.

No comments: