Monday, July 7, 2008

திருவீழிமிழலை

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் கோயில்.திருவீழிமிழலை மூலவர் வீழிநாதேஸ்வரர் பிறபெயர்.கல்யாண சுந்தரேஸ்வரர் பதிகம் அப்பர் சம்பந்தர் அம்மன் சுந்தரகுசாம்பிகை பிறபெயர்.அழகியமாமுலையம்மை தலவிருட்சம் வீழி தீர்த்தம் விஷ்ணு தீர்த்தம்.மாவட்டம் திருவாரூர் தல வரலாறு மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான்.அவர் பரமசிவனிடம் சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார்.பூலோகத்தில் வீழிச்செடிகள் அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும் அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார்.விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி.அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார்.ஒருநாள் சிவனின் திருவிளையாடலால் சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது.அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார்.இதனால் தான் கோயில்களில் கண்மலர் காணிக்கை தரும் பழக்கம் உருவானது.இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன் சலந்தரனை வதம் செய்து.சக்கராயுதத்தை கொடுத்தருளினார்.விஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கண்மலர் இன்றும் சிவனின் பாதத்தில் இருப்பதைக்காணலாம்.பார்வதி திருமணம் காத்தியாயன முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார்.இவரது தவத்திற்கு மெச்சிய பார்வதி அந்த முனிவருக்கே மகளாக பிறந்தாள்.பெண்ணிற்கு திருமண வயது வந்ததும் இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினார்.அப்போது முனிவர் என்றென்றும் இதே திருமணக்கோலத்தில் இத்தலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார்.அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.பெயர்க்காரணம் ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் சந்தனம் செண்பகம் பலா விளா ஆகிய மரங்கள் அடங்கிய காடுகளாக இருந்தன.இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி அஷ்டமாசித்திகளை வழங்கினார்.வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது.இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.படிக்காசு சம்பந்தரும் நாவுக்கரசரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருவீழிமிழலையில் சில காலம் தங்கினர்.அப்போது பஞ்சம் ஏற்பட்டது.இருவரும் வீழிநாதரை பணிந்து பஞ்சம் போக்க பாடினர்.இருவரது கனவிலும் தோன்றிய ஈசன் தினமும் ஒரு பொற்காசு தருவதாகவும் அடியார்களின் பசி தீர்க்கும்படியும் கூறினார்.அதன்படி கிழக்குப்பீடத்தில் உள்ள காசை சம்பந்தரும் மேற்குப்பீடத்திலுள்ள காசை திருநாவுக்கரசரும் எடுத்து அடியார்களிடம் கொடுத்து.அவர்கள் பசி போக்கினர்.இப்போதும் படிக்காசு பீடம் இருக்கிறது.இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் எனப்படுகிறார்.தல சிறப்பு இங்கு பாதாள நந்தி உள்ளது.முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது.இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால்.மாப்பள்ளை சுவாமி எனப்படுகிறார்.மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு.கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட வவ்வால் நந்தி மண்டபம் உள்ளது.சஷ்டியப்த பூர்த்தி திருமணங்களும் இங்கு நடத்தப்படுகின்றன.திறக்கும் நேரம் காலை 6 12மணி மாலை 4 இரவு 8மணி.இருப்பிடம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 28 கி.மீ. துணரத்தில் பூந்தோட்டம் கிராமம் உள்ளது.அங்கிருந்து டவுன் பஸ்களில் தென்கரை சென்று கோயிலை அடையலாம்.அடிக்கடி பஸ் இல்லை என்பதால் பூந்தோட்டத்தில் இருந்து ஆட்டோ க்களில் செல்லலாம்.போன் 04366 273 050 94439 248253.

1 comment:

Unknown said...

My home is near by திருவீழிமிழலை
visit திருவீழிமிழலை temple, you get happiness and all in your life and mind.