Sunday, July 6, 2008

வயலூர்

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் வயலூர் மூலவர் சுப்ரமணியசுவாமி இணை வள்ளிதேவசேனா இறைவன் ஆதிநாதர் இறைவி ஆதிநாயகி கணபதி பொய்யாக்கணபதி தலமரம் வன்னிமரம் தீர்த்தம் சக்திதீர்த்தம் ஊர் குமாரவயலூர் புராணபெயர்.ஆதிவயலூர் மாவட்டம் பிரார்த்தனை நாக சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் அன்று திருக்குளத்தில் நாக சர்ப்ப தோஷம் மூழ்கி முருகனை தரிசித்தால் திருமணத்தடை நீங்கி சுப காரியம் நடைபெறும்.இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள பிரார்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்தது.நோய் நீக்கம் துன்ப நீக்கம் குழந்தை வரம் ஆயுள் பலம் கல்வி அறிவு செல்வம் காவடி எடுத்தல் பால்க்குடம் எடுத்தல் சஷ்டி விரதம் இருத்தல் உடற்பிணி தீர ஆண்கள் அங்கபிரதட்சணம் பெண்கள் கும்பிடுதண்டமும் அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர்.தவிர சண்முகார்ச்சனை சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள்.கார்த்திகை விரதம் இருத்தல் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் இறைவனுக்கு செய்யலாம்.இங்குள்ள பொய்யாகணபதிதான் அருணகிரியாருக்கு அருள் தந்தவர் என்று சொல்லப்படுகிறது.இங்குதான் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடும் ஆற்றலையும் அறிவையும் பெற்றார்.அத்தகைய பேரும் சிறப்பும் கொண்ட முருகன் தலம்.வாரியார் சுவாமிகள்.அந்த அளவு இத்தலத்துக்கும் வாரியாருக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு.இத் திருக்கோயில் பெருமளவு புகழ்பெற செய்ததற்கான அத்தனை பெருமையும் வாரியாருக்கே சாரும்.புராணபெயர் ஆதி வயலூர் அக்னீஸ்வரம் இத்தலத்து இறைவனின் திருநாமங்கள் ஆதிநாதர் அக்னீஸ்வரர் இத்தலத்து அம்பாளின் திருநாமங்கள் ஒ ஆதிநாயகி பூர்வ சித்தி நாயகி தலபெருமைகள் சிவனை முருகன் பூஜித்த தலம்.சிவன் கோயிலில் முருகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தலம்.மூலஸ்தானத்தில் முருகன் மயில் வடக்கு பக்கம் பார்த்து இருக்கிறது.இதற்கு தேவமயில் என்று பெயர்.ஆதிநாயகி ஏனைய தலங்களில் வடக்கு முகம் பார்த்தே இருப்பாள்.இங்கு மட்டும் தென்முகம் பார்த்து இருப்பது அபூர்வமானது.ஏனைய தலங்களில் முருகப்பெருமான் தாய்தந்தையரை முருகப்பெருமான் தனித்து நின்று பூஜை செய்வார்.ஆனால் வயலூரில் தெய்வ குஞ்சரி வள்ளியோடு சேர்ந்து பூஜை செய்கின்ற தனிச்சிறப்பு வயலூர் தலத்திற்கு உண்டு.வயலூரில் முருகக் கடவுள் தனது வேலினால் தடாகம் உருவாக்கி அம்மை அப்பரை வழிபட்டார்.நடராஜர் சூரத்தாண்டவ மூர்த்தியாக உள்ளார்.அருணகிரி நாதருக்கு கல்யாண கோலத்தில் குமாரராக காட்சி தந்ததால் தடைபட்ட கல்யாணங்கள் நடைபெறும்.திருப்புகழை பாடும் தன்மையை தந்தது வயலூர் முருகனே என்பதால் அருணகிரி நாதருக்கு இத்தலத்தில் விஷேச ஈடுபாடு.வாரியார் சுவாமிகளின் தனிப்பட்ட ஈடுபாட்டால் புகழ்பெற்ற முருகன் திருத்தலம்.முருகப் பெருமானே தன் வேலினால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம் இங்கு உள்ளது.பொது தகவல்கள் தொடர்பு கொள்ள வேண்டிய டெலிபோன் எண் 0431 2607344தங்கும் வசதி தேவஸ்தான தங்கும் விடுதிகள்.1.யாத்ரிகர்கள் தங்கும் விடுதி.ரூ.502.திருமண மண்டபம் ரூ.2000 குடும்பத்தோடு வருபவர்கள் திருச்சியில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.திருச்சி நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.கட்டணம் ரூ.150 முதல் ரூ.800 வரை.முக்கிய ஊர்களிலிருந்து தூரம் திருச்சி நகரிலிருந்து 11 கி.மீ.போக்குவரத்து வசதி தமிழகத்தின் மிக முக்கிய நகர் திருச்சி என்பதால் போக்குவரத்து வசதி எளிது.திருச்சி நகரிலிருந்து நகர பேருந்து வசதி மூலம் கோயிலை சென்றடையலாம்.அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சி.அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.முக்கிய திருவிழாக்கள் வைகாசி விசாகம் 12 நாட்கள் 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.கந்த சஷ்டித் திருவிழா சூரசம்காரம் 7 நாட்கள் ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.பங்குனி உத்திரம் 4 நாள் திருவிழா 25 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்தைப் பூசம் 3 நாள் 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.தல வரலாறு.அருணகிரி நாதருக்கு தன் வேலால் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை முருகப் பெருமான் எழுதினார்.திருப்புகழின் பெருமையில் வயலூர் முருகனுக்கு தனிச்சிறப்பு உண்டு.கிருபானந்த வாரியாரின் தனிப்பட்ட ஈடுபாட்டின் காரணமாக உலகப் புகழ் பெற்ற கோயிலாக இன்று இக்கோயில் திகழ்கிறது.

1 comment:

Unknown said...

மேலும் தகவல் அறிய
www.vayalurmuruga.org