Monday, July 7, 2008

விளமல்

அருள்மிகு பதஞ்சலி மனோகரர் கோயில்.விளமல்.மூலவர் பதஞ்சலி மனோகரர் திருமேனி சுயம்பு பிறபெயர்.விளமர் விமலன் அம்மன் மதுரபாஷினி யாழினும் மென்மொழியம்மை தல விநாயகர் சித்தி விநாயகர் தலவிருட்சம் வில்வம் கிளுவை தீர்த்தம் அக்னி தீர்த்தம் பதிகம் பாடியோர் அப்பர் சம்பந்தர் சுந்தரர் பழமை சுமார் 3000 ஆண்டு புராண பெயர்.திருவராகம் ஊர் விளமல் மாவட்டம் திருவாரூர்.தல வரலாறு பதஞ்சலி முனிவர் ஈசனின் நடனக்கோலம் காண தவமிருந்தார்.இவரது தவத்திற்கு மகிழ்ந்த ஈசன் தில்லையில் தனது திருநடனத்தை காண்பித்தார்.இந்த நடனத்தை வியாக்ர பாதரும் கண்டு மகிழ்ந்தார்.அத்துடன் இரு முனிவர்களும் சிவனிடம் ஐயனே.உனது நடனம் கண்டோ ம்.இந்த ஆனந்த நடனத்துடன் தங்களின் அஜபா நடனத்தையும் ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண விரும்புகிறோம்.மேலும் உன் பக்தர்களுக்கும் உனது திருவடி தரிசனத்தை காண்பித்து அருள வேண்டும்.என வேண்டினர்.அதற்கு ஈசன் நீங்கள் இருவரும் ஸ்ரீபுரம் என்று அழைக்கப்படும் திருவாரூர் செல்லுங்கள்.அங்கே எனது நடனத்தையும் திருவடி தரிசனத்தையும் காண்பீர்கள்.அதன்படி இருவரும் திருவாரூர் வந்தனர்.அங்கே எங்கு பார்த்தாலும் சிவலிங்கமே காட்சியளித்தது.எனவே பதஞ்சலி தன் உடலை பாம்பாகவும் வியாக்ரபாதர் தன் காலை புலிக்காலாகவும் மாற்றி திருவாரூர் கமலாம்பாளை வணங்கினர்.அவள் கூறியபடி விளமல் என்ற இடத்தில் விமலாக்க வைரம் என்ற தேவலோக மண்ணில் பதஞ்சலி முனிவர் லிங்கம் பிடித்து வழிபட்டார்.இந்த வழிபாட்டின் பலனாக சிவன் தோன்றி அஜபாவன நர்த்தனம் ஆடி தன் பாதத்தை காட்டி அருளினார்.இந்த தரிசனத்தை விஷ்ணு பிரம்மா முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள் கண்டு களித்தனர்.சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்திற்கு இன்றளவும் தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.எனவே இத்தலம் திருவடி க்ஷேத்திரம் திருவிளமல் சிவபாத ஸ்தலம் என போற்றப்படுகிறது.தல சிறப்பு சிவனின் தேவாரப்பதிகம் பெற்ற சோழநாட்டு காவிரித் தென்கரையில் இது 90வது தலம்.இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது அந்த ஔத லிங்கத்தில் பிரதிபலித்து லிங்கமானது தீபஜோதியாக தெரிவதை காணலாம்.அம்மன் மதுரபாஷினி மனிதனுக்கு தேவையான 34 சவுந்தரிய சவுபாக்கியங்கள் தரும் சோடாட்சர தேவியாக ஸ்ரீ சக்கரம் தாங்கி ராஜராஜேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள்.எனவே தான் அகத்தியர்.ஸ்ரீசக்ர தாரிணி ராஜசிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே என இத்தலத்து அம்பிகையை புகழ்ந்து பாடுகிறார்.அம்மனின் சக்தி பீடங்களில் இது வித்யா பீடமாக வழிபாடு செய்யப்படுகிறது.தொழில் சிறக்கவும் கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் முன்பு இந்த அம்மனுக்கு அர்ச்சனை செய்து.பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை இங்கு உள்ளது.இங்குள்ள ராஜதுர்க்கை எட்டு கைகளுடன் வீற்றிருக்கிறாள்.வலது கையில் சூலமும் இடது கையில் கிளியும் தாங்கி சிம்ம வாகனத்தில் இருப்பது சிறப்பு.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ராகு.புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் திருமண தடை உள்ளவர்கள் கல்வியில் மேன்மையடைய விரும்புவர்கள் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி.இத்தலத்தில் நந்தி.சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்து ஆடிய வடகிழக்கு திசையை நோக்கி தலை திருப்பி இருப்பதை இன்றும் காணலாம்.திருவிழா சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடிய தலமாதலால் மார்கழி திருவாதிரை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் கொண்டாடப்படுகிறது.பூஜை நேரம் காலை 7.30 12 மணி மாலை 4.30 7.30 மணி.இருப்பிடம் திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தஞ்சாவூர் ரோட்டில் 2 கி.மீ. துணரத்தில் கோயில் உள்ளது.அர்ச்சகர் எஸ். சந்திரசேகரன்.போன் 98947 81778 அருகிலுள்ள ரயில் நிலையம் திருவாரூர் அருகிலுள்ள விமான நிலையம் சென்னை திருச்சி.

No comments: